பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SCSI connector

402

SDLC


கடைசி சாதனமும் தவிர) இரண்டு வடங்கள் மூலம் வேறு இரு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெய்ஸி சங்கிலி போன்று தோற்றமளிக்கும்.

SCSI connector:ஸ்கஸ்ஸி இணைப்பி: ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தை ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கும் ஒரு வடஇணைப்பி.

ஸ்கஸ்ஸி இணைப்பி

SCSI device :ஸ்கஸ்ஸி சாதனம்: கணினியின் மையச் செயலகத்துடன் தகவல்களையும் கட்டுப்பாட்டு சமிக்கைகளையும் பரிமாறிக் கொள்ள ஸ்கஸ்ஸி தர வரையறைகளைப் பயன்படுத்தும் ஒரு புற நிலைச் சாதனம்.

SCSI ID : ஸ்கஸ்லி ஐடி : ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தைத் தனித்து அடையாளம் காட்டும் குறியீடு. ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனமும் வெவ்வேறு ஸ்கஸ்ஸி ஐடி-க்களைக் கொண்டிருக்கும். ஒரே ஸ்கஸ்ஸிப் பாட்டையில் உச்சஅளவாக எட்டு ஸ்கஸ்ஸி ஐடிக்களை வைத்துக் கொள்ளலாம்.

SCSI network :ஸ்கஸ்ஸி பிணையம் : ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறும் பரப்புப்பிணையம்போலச்செயல்படும்.

SCSI port :ஸ்கஸ்ஸி துறை : கணினிக்குள்ளேயே இருக்கும் ஒரு ஸ்கஸ்ஸி புரவன் தகவி (Host Adapter) ஸ்கஸ்லித்துறை எனப்படுகிறது. கணினிக்கும் ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாதனங்களுக்கும் இடையே ஒரு தருக்க நிலை இணைப்பைத் (logical connection)தருகிறது .

S.cuve : எஸ் வளைவு.

.sd : .எஸ்டி : ஒர் இணையதள முகவரி சூடான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SDK : எஸ்டிகே : மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி - எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் குறிப்பிட்டவகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நிரல்கள், செயல்கூறுகள், மொழி மாற்றி, நிரல்திருத்தி போன்ற அனைத்துக் கருவிகளும் அடங்கிய மென்பொருள் தொகுப்பு.

SDLC : எஸ்டிஎல்சி : 1. ஒத்திசைத் தகவல் தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architecture)அடிப்படை