பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

secondary storage

404

security log


வலைத் தகவல்களை வழங்குகின்ற, ஆனால் நேரடியான இணைய இணைப்பை வழங்காத ஒர் இணையச் சேவை வழங்கும் நிறுவனம்.

secondary storage : துணைநிலைச் சேமிப்பகம் : கணினியில் குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) தவிர பிற தகவல் சேமிப்பு ஊடகங்கள், குறிப்பாக நாடா அல்லது வட்டினைக் குறிக்கும்.

secret key : மறைக்குறி; மறைத்திறவி.

section : பிரிவு.

secure channel : பாதுகாப்பான தடம்: அனுமதியற்ற அணுகல் மற்றும் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு செய்தித் தொடர்பு இணைப்பு. பொதுப் பிணையத்திலிருந்து விலகித் தனித்திருத்தல். மறையாக்கம் அல்லது பிற கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இப்பாதுகாப்பு அமையலாம்.

Secured Electronic Transaction (SET): பாதுகாப்பான மின்னணு பரிமாற்ற முறை.

Secure Electronics Transactions Protocol : பாதுகாக்கப்பட்ட மின்னணுப் பரிமாற்ற நெறிமுறை : இணையத்தில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்கான நெறிமுறை. ஜிடீஇ, ஐபிஎம், மாஸ்டர் கார்டு, மைக்ரோசாஃப்ட், நெட்ஸ்கேப், எஸ்ஏஐசி, டெரிசா சிஸ்டம்ஸ், வெரிசைன், விசா கார்டு ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது.

secure site : பாதுகாப்பான தளம் : பற்று அட்டை எண்கள் மற்றும் பிற சொந்தத் தகவல்களை அனுமதியற்ற நபர்கள் அத்துமீறி அணுகா வண்ணம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதிசெய்யும் திறனுள்ள வலைத் தளத்தைக் குறிக்கிறது.

secure transaction technology : பாதுகாப்பான பரிமாற்றத் தொழில்நுட்பம் : சொந்தத் தகவல்களடங்கிய படிவங்களைச் சமர்ப்பித்தல், பற்று அட்டை மூலம் பொருள் வாங்குதல் போன்ற நிகழ்நிலைத் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பான செருகுவாய் அடுக்கு (SSL - Secure Sockets Layer), பாதுகாப்பான ஹெச்டிடிபீ (S-HTTP) ஆகிய நெறிமுறைகளைப் பயன்படுத்துதல்.

secure wide area network: பாதுகாப்பான விரிபரப்புப் பிணையம் : ஒரு பொதுப் பிணையத்தில் (இணையம் போன்ற) தகவல் பரிமாற்றங்களை அத்துமீறி நுழைபவர்களின் குறிக்கீட்டிலிருந்து தடுக்க, மறையாக்கம் (encryption), சான்றுறுதி (authorisation), உறுதிச்சான்று (Authentication) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் கணினித் தொகுதி.

security : பாதுகாப்பு : தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தகவலையும் காத்தல். பெரும்பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற கணினி அமைப்புகளில் அனுமதியில்லாத நபர்கள் அத்துமீறி நுழைய அதிக வாய்ப்புள்ளது.

security log : பாதுகாப்புப் பதிகை : தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு