பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.sm

417

SMART system


அழுத்தி வைத்திருந்தால்தான் அதற்குரிய எழுத்துத் திரையில் பதிவாகும்.

.sm:.எஸ்எம்:ஓர் இணையதள முகவரி சான் மாரினோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

small caps:சிறு பெரிய எழுத்துகள்: ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்து,பெரிய எழுத்து வேறுபாடு உண்டு.ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் சிறிய எழுத்துகளும் பெரிய எழுத்துகளும் உண்டு.ஓர் எழுத்துருவில் வழக்கமாக இருக்கும் பெரிய எழுத்துகளின் உருவளவைவிடச் சிறியதாக இருக்கும் பெரிய எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.(எ-டு):small,SMALL,SMALL.

small icons:சிறு சின்னங்கள்.

small model:சிறிய மாதிரியம்:இன்டெல் 80 x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம்,இதில் நிரல் குறிமுறைக்கு 64 கேபி இடமும்,தகவல்களுக்கு 64 கேபி இடமும் மட்டுமே ஒதுக்க முடியும்.

smart linkage:துடுக்குத் தொடுப்புகை:ஒரு நிரலில்,அழைக்கப்படும் நிரல்கூறுகள் எப்போதும் சரியான இனத்து அளபுருக்களுடன் அழைப்பதற்கு உத்திரவாதம் செய்யும் பண்புக்கூறு.(எ-டு):சி# மொழியில்,

void swap (ref int x, ref int y)

       {                                                 
        - - - - - - - -
        - - - - - - - - 
                        }

என்று ஒரு செயல்கூறு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கூறினை swap (ref a, ref b); என்று அழைக்கும்போது a,b ஆகியவை int இனத்தைச் சேர்ந்தவைதானா என்பது சரிபார்க்கப்பட்டு செயல்கூறு இயக்கப்படும்.

smart quotes:துடுப்பு மேற்கோகோள் குறிகள்: பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் "என்னும் சாதாரண மேற்கோள்குறி விசையை அழுத்தும்போது, தாமாகவே சிறப்பு மேற்கோள் (" ")குறிகளாக மாறிக்கொள்ளும் வசதி உள்ளது.

SMART system:ஸ்மார்ட் முறைமை:ஸ்மார்ட் அமைப்பு:SMART என்பது தானாகவே கண்காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சாதனத்தின் செயல்திறனையும் நம்பகத்தன் மையையும் கண்காணித்து முன்னறிந்து சொல்லும் தொழில்நுட்பம்.இத்தொழில்நுட்பத்தில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு பழுதாய்வுச் சோதனைகளை மேற்கொண்டு சாதனங்களின் குறைகளைக் கண்டறிந்து சொல்கின்றன.உற்பத்தியைப் பெருக்குதல்,தகவல் களைப் பாதுகாத்தல் இதன் நோக்கம்.

SMDS:எஸ்எம்டிஎஸ்:இணைப்பிடு பல் மெகாபிட் தகவல் சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இது ஒரு மீஉயர் வேக,இணைப்பிடு தகவல் போக்குவரத்துச் சேவை ஆகும்.குறும்பரப்புப் பிணையங்களையும், விரி


27