பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spot function

423

SSA


|

குறியிட நிறத்துக்கும் அச்சுப்பொறி ஒவ்வொரு அடுக்காக அச்சிடும்.

spot function:குறியிடச் செயல்பாடு: ஒளி-நிழல் வேறுபாட்டு அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வகைத் திரைக்காட்சி உருவாக்கப் பயன்படும் போஸ்ட்-ஸ்கிரிப்ட் செயல்முறை.

spraycan : தெளிப்பான் : பெயின்ட் பிரஸ், பெயின்ட் போன்ற ஒரு வரைவோவிய பயன்பாட்டு மென் பொருளில் படிமம் ஒன்றில் புள்ளிகளின் தோரணியை உருவாக் கப் பயன்படும் கருவி.

spreadsheet programme :விரிதாள் நிரல் :வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணி களைச் செய்வதற்கென உருவாக்கப் பட்ட மென்பொருள் தொகுப்பு. தகவல் மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படுகின்றன. வாய்பாடுகள் மூலம் தகவல்கள் உறவுபடுத்தப்படுகின்றன. ஒரு கலத்தில் இருக்கும் மதிப்பினை மாற்றினால் தொடர்புடைய அனைத்துக் கலங்களிலுமுள்ள மதிப்புகள் மாற்றப்படும். விரிதாள் பயன்பாடுகள் பெரும்பாலும் வரை பட வசதிகளையும் கொண்டிருக்கும். உரை, எண் மதிப்புகள் மற்றும் வரை படங்களுக்கான எண்ணற்ற வடிவமைப்பு (formating) வசதிகளைக் கொண்டிருக்கும்.

spring tension : வில் இழுவிசை.

sprocket feed :பற்சக்கரச் செலுத்துகை : அச்சுப் பொறியில் தாளினை உட்செலுத்தும் அமைப்பு. பற்சக்கரம் போன்ற அமைப்பு தாளின் துளை களில் பொருந்தி தாளை நகர்த்திச் செல்லும். இதில் பின் செலுத்துகை, இழுவைச் செலுத்துகை இருவகை உண்டு.

SPX : எஸ்.பீ.எக்ஸ் : 1. வரிசைமுறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequenced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transport Layer) செயல்படும் நெறிமுறை. நாவெல் நெட்வேரில் பயன்படுத்தப் படுகிறது. பொட்டலங்களை அனுப்பிவைக்க, எஸ்.பீ.எக்ஸ், செய்தி முடிந்துவிட்டதா என்பதை உறுதி செய்கிறது. பொதுவாக எஸ்.பீ.எக்ஸ்/ ஐபிஎக்ஸ் எனச் சேர்த்தே குறிப்பிடுவர். 2. சில வேளைகளில், ஒரு திசை எனப் பொருள்படும் Simplex என்ற சொல்லின் சுருக்கமாகவும் குறிக்கப்படும்.

.sr : .எஸ் ஆர் : ஒர் இணைய தள முகவரி சுரினாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SRAPI : எஸ்ஆர்ஏபிஐ; ஸ்ரேப்பி : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடை முகம் எனப் பொருள்படும் Speech Recognition Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நாவெல், ஐபிஎம், இன்டெல், பிலிப்ஸ் டிக்டேஷன் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கிய குரலறிதல், உரையினைப் பேச்சாக மாற்றுதல் போன்ற தொழில் நுட்பத்துக்கான, பணித்தளம் சாரா பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

SSA : எஸ்எஸ்ஏ : நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று பொருள் படும் Serial Storage Architecture