பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.st

424

starting point


|

என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டியணைப்பு (Ring Topology) முறையில் சாதனங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் ஒத்திசைவானது. ஒவ்வொரு திசையிலும் வினாடிக்கு 20 மெகாபைட் வரை தகவல் அனுப்பிவைக்க முடியும்.

.st : .எஸ்.டீ : ஒர் இணைய தள முகவரி சாவோ டோம்-பிரின்ஸ்பீ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ST506 interface :எஸ்டீ 506 இடைமுகம் :நிலைவட்டு இயக்ககக் கட்டுப்படுத்திகளுக்கென சீகேட் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய வன்பொருள் சமிக்கை வரன் முறை. இந்த இடைமுகத்தின் எஸ்டி506/412 பதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறையாகிவிட்டது.

stable : தொடக்குவிசை சுற்று.

stable tigger circuit: நிலை தொடங்கு விசைச்சுற்று.

stairstepping : மாடிப்படி: ஒரு வரைகலைக் கோடு அல்லது வளை கோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடையதாக அமைத்தல்.

stale link : நாட்பட்ட தொடுப்பு: பயனற்ற தொடுப்பு : நீக்கப்பட்ட அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட்ட ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தைச் சுட்டுகின்ற பயனற்ற மீத்தொடுப்பு.

stand alone server:தனித்தியங்கு வழங்கன்.

stand alone graphics: தனித்தியங்கு வரைகலை.

standard analog signals: நிலையான தொடர்முறைக் குறியீடுகள்.

standard buttons : இயல்பான பொத்தான்கள்.

standard function : முன்னிருப்பு செயல்கூறு: உள்ளிணைந்த செயல்கூறு ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உள்ளிணைக்கப்பட்டுள்ள, பயன்படுத்தத் தயாராய் உள்ள ஒரு செயல்கூறு.

standard newsgroup hierarchy : இயல்பான செய்திக்குழு படிநிலை.

standard parallel port : இயல்பான இணைநிலைத் துறை.

standard tool bar :மரபுநிலைக் கருவிப் பட்டை.

standard width:இயல்பான அகலம் .

stand by button : மாற்று பொத்தான்.

star-dot-star : ஸ்டார்-டாட்-ஸ்டார் (*.*) எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பகத்திலுள்ள அனைத்துக் கோப்புகளையும் என்பதைக் குறிக்கிறது. கோப்பின் முதன்மைப் பெயர் எதுவாக இருப்பினும், வகைப்பெயர் எதுவாக இருப்பினும் என்பது இதன் பொருள்.

star network: நட்சத்திரப் பிணையம்.

start : தொடக்கம்; தொடங்கு: விண்டோஸ் இயக்க முறையில் பணிப்பட்டையில் (Taskbar) உள்ள பொத்தான் இதிலிருந்துதான் பணிகளைத் தொடங்க வேண்டும்.

starting point :தொடக்கப் புள்ளி : பயனாளர்கள் வலைத் தளங்களைப்