பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

top-of-file

449

tracks per inch


குறிப்பிட்ட கருப்பொருளில் பொதுவான ஆர்வம் உள்ளவர்களின் குழு.

top-level domain:மேல்நிலைக் களம்: இணைய முகவரிகளின் களப்பெயர் அமைப்பில், பெரும்பாலான களப்பெயர்களுக்குப் பொருந்தக்கூடிய பரந்த வகையைக் குறிக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள மேல்நிலைக் களப்பெயர்,.com,.edu,.gov,.net,.org,.mil,.int ஆகியவற்றில் ஒன்றாக இருக்கிறது.

top-of-file:கோப்பின் தொடக்கம்:1.ஒரு கோப்பின் தொடக்கம்.குறிப்பிட்ட பயன்பாட்டில் உருவாக்கப்படும் கோப்புகளின் முதல் பைட் ஒரு சிறப்புக் குறியீடாக இருக்கும்.அதைக் கொண்டே அக்கோப்பு குறிப்பிட்ட வகையைச் சார்ந்தது என்பதை அறியமுடிகிறது.2.வரிசை முறைப்படுத்தப்பட்ட ஒரு தரவுத்தள அட்டவணையில் முதல் ஏடு.

.tor.ca:.டீஒஆர்.சி.ஏ: ஓர் இணையதள முகவரி கனடா நாட்டின் டொரன்டோ நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

total:கூட்டுத் தொகை.

total time:முழு நேரம்.

total transfer:முழு மாற்றல்.

touch pad:தொடு திண்டு: அழுத்த உணரிகளைக் கொண்ட ஒருவகை வரைகலை வரைபட்டிகை (tablet).கையால் தொட்டு காட்டியின் இடம் உணர்த்தப்படும். மின்காந்தத்தைப் பயன்படுத்தும் மிகுதெளிவு வரைபட்டிகைகளும் உள்ளன.

touch sensitive:தொடு உணர்வு.

TP monitor:டீபீ கண்காணிப்பி;தொலை செயலாக்கம் (Teleprocessing) அல்லது பரிமாற்றச் செயலாக்கம்(Transaction Processing) என்பதன் சுருக்கம்.முனையங்களுக்கும் (அல்லது கிளையன்களுக்கும்),பெருமுகக் கணினிக்கும் (அல்லது வழங்கனுக்கும்) இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் ஒரு நிரல்.ஒன்று அல்லது மேற்பட்ட நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கப்(OLTP)பயன்பாடுகளுக்கு முரணில்லாச்சூழலை வழங்குகின்றன.

.tr:.டீஆர்: ஓர் இணையதள முகவரி துருக்கி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

trace dependents:சார்புகளைத் தேடு; எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

trace error:பிழை தேடு.

trace precedents:முன்காரணிகளைத் தேடு.எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

trackpad:தடத்திண்டு: தொடுதலை உணரும் திறனுள்ள சிறிய தட்டை வடிவத் திண்டால் ஆன ஒரு சுட்டுச் சாதனம். பயனாளர்கள் திரையில் தோன்றும் காட்டியை இங்குமங்கும் நகர்த்த,தடத்திண்டின்மீது விரலை வைத்து நகர்த்தினால் போதும்.இத்தகைய சாதனம் பெரும்பாலும் மடிக்கணினிகளில் பொருத்தப் பட்டுள்ளன.

tracks per inch:ஓர் அங்குலத்தில் தடங்களின் எண்ணிக்கை: ஒரு வட்டில் ஓர் அங்குல ஆரப்பரப்பில் பதியப்பட்டுள்ள ஒருமைய வட்டத் தடங்களின் (தரவுச் சேமிப்பு வளையங்கள்) அடர்த்தி.அதிக அடர்த்தி (அதிக எண்ணிக்கை