பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

track changes

450

transfet statement


யிலான தடங்கள்) இருப்பின்,வட்டில் அதிகமான தகவலைப் பதிய முடியும்.

track changes:மாற்றங்கள் குறித்து-வை. எம்எஸ் வேர்டில் ஒரு கட்டளை.

track time elapsed:தட நேர முடிவு.

track time remaining:தட நேர மிச்சம்.

tracker ball:தடக்கோளம்.

trademark:வணிகச் சின்னம்: ஒரு நிறுவனம் தானே தயாரிக்கும் தனியுரிமை விற்பனைப் பொருட்களை அடையாளங்காட்டும் ஒரு சொல்,சொல்தொடர்,குறியீடு,அல்லது ஒரு படிமம் (அல்லது இவற்றுள் சிலவற்றின் சேர்க்கை). பெரும்பாலும் வணிகச் சின்னத்தின் அருகில் TM அல்லது ® என்ற குறியீடு இருக்கும்.

trade off:ஈடுகட்டல்.

trade show:வணிகக் கண்காட்சி; விற்பனைப் பொருட்காட்சி;பல்வேறு விற்பனை நிறுவனங்கள் சேர்ந்து தங்களுடைய விற்பனைப் பொருட்களை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தல்.

traffic:போக்குவரத்து':ஒரு தகவல் தொடர்பு இணைப்பு அல்லது தடத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள்.

traffic intensity:போக்குவரத்து அடர்வு.

trail:செல் தடம்.

trailer record:முன்னோட்ட ஏடு.

trailer edge: முன்னோட்ட விளிம்பு.

trailing edge:பின் விளிம்பு:ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி.ஓர் இலக்கமுறை சமிக்கை நிகழ் நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலைமாற்றத்தைக் குறிக்கிறது.

train:தொடர்,வரிசை: தொடர் வரிசையாய் அமைந்திருக்கும் உருப்படிகள் அல்லது நிகழ்வுகள். (எ-டு) இருமச் சமிக்கைகளை அனுப்பிடும் போது இடம்பெறும் இலக்கமுறைத் துடிப்புகள்.

train:பயிற்று,கற்பி: ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்று இறுதிப் பயனாளருக்குக் கற்றுக் கொடுத்தல்.

transaction processing council:பரிமாற்றச் செயலாக்கக் குழு:வரையறுக்கப்பட்ட தர நிர்ணயிப்புகளை வெளியிடுவதை குறிக்கோளாகக் கொண்ட வன்பொருள்,மென்பொருள் விற்பனையாளர்களின் குழு.

transcription machine:எழுத்துப்படி பொறி.

transctional application:பரிமாற்றப் பயன்பாடு


transfer,conditional:நிபந்தனை மாற்றல்.

transfer control,conditional:நிபந்தனைக் கட்டுப்பாடு மாற்றல்.

transfer,serial:தொடர் மாற்றல்.

transfer,total:முழு மாற்றல்.

transfer statement:இடமாற்றக் கூற்று:மாற்றல் கூற்று;ஒரு நிரலாக்க மொழியில்,நிரலின் ஓட்டத்தில்,கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை.பெரும்பாலான