பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

traverse

452

True Type


இடப்பட்ட கோப்பு உண்மையில் அழிக்கப்படாது. தேவையானபோது மீட்டுக்கொள்ளலாம்.குப்பைத் தொட்டிமீது இரட்டைச் சொடுக்கிட்டுத் திறந்து மீட்க வேண்டிய கோப்பினை குப்பைத் தொட்டியிலிருந்து இழுத்து வெளியேவிட வேண்டும்.குப்பைத் தொட்டியைக் காலியாக்கு (Empty Trash) என்னும் கட்டளை மூலம் அதிலுள்ள கோப்புகளை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

traverse:பயணித்தல்; ஊடு கடத்தல்: நிரலாக்கத்தில்,மரவுரு அல்லது அதுபோன்ற தரவுக் கட்டமைப்புகளில் அனைத்துக் கணுக்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணுகுவதைக் குறிக்கும்.

trays:இழுப்பறைகள்.

tree sort:மர வரிசைப்படுத்தல்.

trellis-coded modulation:பின்னல் குறிமுறைப் பண்பேற்றம்:90° தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம்.வினாடிக்கு 9600 துண்மி(பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.சுமப்பி அலையின் பாகை,வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு,தகவலானது தனித்த துண்மி(பிட்டு)தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது.பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன்சேர்க்கப்படுகின்றன.

:trigger:விசைவில்'.

trim:ஒழுங்கமை.

trial version:வெள்ளோட்டப் பதிப்பு: முன்னோட்டப் பதிப்பு.

tribble click:முச்சொடுக்கி.

trouble shoot:பிழை காண்.

trol:தூண்டில் செய்தி:ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில்,சூடான பதிலை எதிர்நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக்கிடமான செய்தி.எடுத்துக் காட்டாக,வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழுவில் பூனையைத் துன்புறுத்துவதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிடல்.

trouble ticket:சிக்கல் சீட்டு:ஒரு குறிப்பிட்ட சாதனம் அல்லது கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல் பணிப்பாய்வுச்(work flow) செயலாக்கம் மூலமாகக் கண்டறியப்பட்டுத் தரப்படும் அறிக்கை,தொடக்க காலங்களில் இது தாளில் அச்சிடப்பட்டதாய் இருந்தது.இன்றுள்ள பல்வேறு பணிப்பாய்வு மற்றும் உதவி-மேசைப் (Help Dest)பயன்பாடுகளில் மின்னணு சிக்கல் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

True Basic:ட்ரூபேசிக்: மூல பேசிக் மொழியை உருவாக்கிய ஜான்கெம்னியும் தாமஸ்குர்ட்ஸும் இணைந்து,பேசிக் மொழியைத் தரப்படுத்தவும்,நவீனப்படுத்தவும் 1983ஆம் ஆண்டில் ட்ரூபேசிக் மொழியை உருவாக்கினர். ட்ரூ பேசிக்கில் வரி எண்கள் தேவையில்லை. கட்டமைப்பான (structured),மொழிமாற்றி (compiler) அடிப்படையிலான மொழியாகும். உயர்நிலைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளைக்(control structures) கொண்டது.இதனால் கட்டமைப்பு நிரலாக்கம் (structured programming) இயல்வதாகிறது.

True Type:மெய்வகை: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1991இல்