பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tuple

454

two-tier client/server


tuple:பண்புக்கூறுத் தொகுதி;கிடக்கை; ஏடு:ஒரு தரவுத்தள அட்டவணையில் தொடர்புடைய,பண்புக்கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி.உறவுநிலைத் தரவுத்தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது.உறவுநிலையில்லாத் அட்டவணை கோப்புகளில் ஏடு (Record) என அழைக்கப்படுகிறது.

turnpike effect:வழிமறிப்பு விளைவு: ஒரு தகவல் தொடர்பு அமைப்பில் அல்லது ஒரு பிணையத்தில் அளவுக்கதிகமான போக்குவரத்தினால் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டை நிலை.

.tv:.டீவி: ஓர் இணையதள முகவரி தூவாலு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.tw:.டீ.டபிள்யூ:ஓர் இணையதள முகவரி தைவான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

TWAIN:ட்வய்ன்:ஓர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில்நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு பொறியொத்த படிமக்கவர்வு சாதனங்களுக்கும் இடையேயான,ஏற்றுக் கொள்ளப்பட்ட செந்தர இடைமுகம்.ஏறத்தாழ அனைத்து வருடுபொறிகளிலும் ட்வய்ன் தொழில்நுட்பம் உள்ளது.மென்பொருள்களிலும் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

tween:இடையுரு:இடையாள்:கணினி வரைகலையில் உருமாற்ற(morphing) நிரலில் தொடக்க உருவுக்கும் இறுதி உருவுக்கும் இடைப்பட்ட உருவங்களைக் கண்டறிதல்.

twisted-pair cable:முறுக்கிணை வடம்: இரண்டு தனித்தனி தடுப்புறையிட்ட கம்பிகள் ஒன்றாக முறுக்கப்பட்ட வடம்.அருகிலுள்ள வடங்களிலிருந்து வரும் வானலை இடையூறுகளைக் குறைக்க இவ்வடம் பயன்படுத்தப்படுகிறது.இரண்டிலொரு கம்பியில் முக்கியமான தகவல் சுமந்து செல்லப்படுகிறது. இன்னொரு கம்பி தரைப்படுத்தப்படுகிறது (earthed).

twisted pair wire:முறுக்கிணைக் கம்பி.

two-dimensional mode:இருபரிமாண மாதிரியம்:'நீள,அகலம் கொண்ட பருநிலைப் பொருள்களைக் கணினியில் பாவிப்பது.ஆழம் உருவகப்படுத்தப்படுவதில்லை.x,y-ஆகிய இரு அச்சுகளில் பொருளின் பரிமாணங்கள் குறிக்கப்படும்.

two dimentional storage:இருபரிமாண சேமிப்பகம்.

two-out-of-five-code:ஐந்தில் இரண்டு குறிமுறை:தகவல் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படும் பிழை உணர்வுமிக்க குறிமுறை.பத்து இலக்கங்கள்(0முதல்9வரை) ஒவ்வொன்றையும் ஐந்து இரும இலக்கங்களால் (0,1)குறிப்பது.ஐந்து இரும இலக்கங்களில் இரண்டு 1மூன்று 0ஆகவோ,இரண்டு 0மூன்று 1ஆகவோ இருக்கும்.

two-planet internet:இருகோள் இணையம்.

two-tier client/server:ஈரடுக்குக் கிளையன்/வழங்கன்:ஒரு வகை