பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

TXD

455

typeface


கிளையன்/வழங்கன் கட்டுமானம்.இதில் மென்பொருள் அமைப்புகள் இரண்டு அடுக்குகளாகக் கட்டமைக்கப்படுகின்றன.(1) பயனாளர் இடை முகம்/வணிகத்தருக்க அடுக்கு. (2)தரவுத்தள அடுக்கு.நான்காம் தலைமுறை மொழிகள்(4GLs),இந்தவகை ஈரடுக்குக் கிளையன்/வழங்கன் கட்டுமானம் செல்வாக்குப் பெற்று விளக்குவதற்கு உதவின.

TXD:டீஎக்ஸ்டீ:தகவலை அனுப்பு (Transmit Data)என்பதன் சுருக்கம் அனுப்பப்படும் தகவலை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப்பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும்.கணினியிலிருந்து இணக்கிக்கு ஆர்எஸ்-232-2 இணைப்புகளில் இரண்டாவது பின்.

.txt:.டீஎக்ஸ்டீ:ஆஸ்கி உரைக்கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும் .டீ.எக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை.இதன்காரணமாக இவ்வகைக் கோப்புகளை எந்த உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளிலும் கையாளமுடியும்.

tymnet:டிம்நெட்:நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நிகழ்நிலைச் சேவைகளோடும், இணையச் சேவையாளர்களோடும் இணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பொதுத்தகவல் பிணையம்.

type-ahead capability:தொடர் தட்டச்சுத் திறன்: விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் விசையழுத்தங்களை இடைநிலை நினைவகத்தில் பிறகு திரையில் காட்டும் திறனுள்ள ஒரு கணினி நிரல்.பயனாளர் வேகமாகத் தட்டச்சு செய்தால், அந்த வேகத்தில் எழுத்துகளைத் திரையில் காட்டமுடியாதபோது சில விசையழுத்தங்களை இழக்க நேரலாம்.இப்படி நிகழ்வதைத் தவிர்க்கவே இடைநிலை நினைவகத்தில் உள்ளீடுகள் சேமிக்கப்படுகின்றன.

type casting:இனமாற்றம்;வகை மாற்றம்: ஒரு தரவின மதிப்பை வேறொரு தரவினமாக மாற்றுதல்(எ.டு) மெய்யெண் இனமதிப்பை முழுஎண் மதிப்பாக மாற்றுதல்.

type declaration:இன அறிவிப்பு:பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக்கொள்ள வசதி உள்ளது.ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தரவினங்களை உருவாக்கி அறிவிக்கலாம்.(எ-டு) சி-மொழியில் struct அறிவிப்பு மூலம் புதிய தரவினங்களை உருவாக்கலாம்.சி++,ஜாவா,சி# மொழிகளில் class என்ற அறிவிப்பின் மூலம் புதிய தரவினங்களையும் அவற்றின் பண்புகள், வழி முறைகளையும் வரையறை செய்ய முடியும்.

typetace:அச்சுரு: அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட,பெயரிடப்பெற்ற எழுத்துகளின் தொகுதி.(எ-டு) Helvetica Bold Oblique.இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness),குறிப்பிட்ட அளவு கோடுகளின் தடிமனும்(Stroke Weight) கொண்டவை.அச்சுரு, எழுத்துரு (Font)விலிருந்து மாறுபட்டவை. எழுத்துருக்கள் குறிப்