பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

UPS

463

usable



(Lower Case), A என்பது பெரிய எழுத்து (Upper case).

UPS : யுபீஎஸ்: தடங்கலில்லா மின்வழங்கல் எனப்பொருள்படும் Uninterrupted Power Supply என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினிக்கும் மின்வழங்கு முனைக்கும் இடையே பயன்படுத்தப்படும் சாதனம். இதனுள்ளே ஒரு மின்கலம் இருக்கும். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கணினிக்கு மின்கலத்திலிருந்து மின்சாரம் கிடைத்துவிடும். இதனால் கணினி தடங்கலின்றி தொடர்ந்து செயல்படும். மின்தடங்கலை உணர்ந்து உடனடியாக மின் கலத்துக்கு மாற்றித்தரும் சிறப்பு உணரி உள்ளே இருக்கும். 10 அல்லது 20 நிமிடங்களே மின்கலத்திலிருந்து கணினிக்கு மின்சாரம் கிடைக்கும். இந்த நேரத்துக்குள் பயனாளர் தன்னுடைய பணியை முறைப்படி முடித்துக்கொள்ள வேண்டும். முக்கிய தகவல்களை சேமித்துக் கொள்ள வேண்டும்.

urban legend : நகர்ப்புறக் கதை : இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மைபோல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பதுபோன்ற செய்திகள் உலவுவதுண்டு. ஆர்வத்தைத் தூண்டும் சில செய்திகள் ஆபத்தைச் சுமந்து வருவதும் உண்டு. மின்னஞ்சலின் கருப்பொருளாக ஆர்வத்தைத் தூண்டும் செய்தி இருக்கும் அம்மடலைத் திறந்தால் உங்கள் கணினியில் நச்சுநிரல் குடியேறிவிடும்.

URL : யுஆர்எல்: ஒருசீரான வள இடங்காட்டி எனப்பொருள்படும் Uniform Resource Locator என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் வளம் ஒன்றின் இருப்பிடம் காட்டும் முகவரி. இணைய வளங்களைக் கண்டறிய உலாவிகள் இந்த முகவரியையே பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் யுஆர்எல், அவ்வளத்தை அணுகப் பயன்படும் நெறிமுறையின் பெயரைத் தொடக்கத்தில் கொண்டிருக்கும். வளம் சேமிக்கப் பட்டுள்ள வழங்கனின் பெயர் அடுத்து இடம்பெறும். அடுத்து களப்பிரிவு இடம் பெறுவதுண்டு. (எ-டு). http://www.microsoft.com.

.us : .யு.எஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பாநெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப்பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, .com, .gov, .edu, .org, .mil, .net ஆகிய மேல்நிலைக் களப் பெயருக்கு அடுத்து .us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத்தளங்கள் .gov.us, .mil.us என்பதுபோன்ற பின்னொட்டுகளைப் பெறும்.

usable : பயன்படத்தகு : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப்பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது, நெளிவு சுளிவாக உள்ளது. பிழைகளின்றி உள்ளது. தேவையற்ற குழப்பமான