பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

web browsing center

485

webmaster


யிடுவதுடன்,அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ள உதவும் ஒரு கிளையன் பயன்பாடு. லின்க்ஸ்(Lynx) போன்ற இணைய உலாவிகள், செயல்தளக் கணக்கு (Shell Account) வைத்திருப்பவர்கள் பயன்படுத்துவது. ஹெச்டீஎம்எல் ஆவணத்தின் உரைப்பகுதியை மட்டுமே பார்வையிட முடியும். பெரும்பாலான உலாவிகள் உரைப்பகுதி மட்டுமின்றி வரைகலைப் படங்கள்,கேட் பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலையும் தருகின்றன.ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும் ஜாவா அப்லெட்டுகள் அல்லது ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசை கள் போன்ற சிறுநிரல்களையும் இயக்கும் வல்லமை பெற்றுள்ளன. சில உலாவிகளுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்ய உதவி மென் பொருள்கள் (plug-ins) வேண்டியிருக்கலாம். தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் இணைய உலாவிகள்,பயனாளர்கள்,மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் உதவுகின்றன.செய்திக்குழுக்களைப் பார்வையிடவும் கட்டுரைகள் அஞ்சல் செய்யவும் பயன்படுகின்றன.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ் புளோரர்,நெட்ஸ்கேப் நிறுவனத் தின் நேவிக்கேட்டர் ஆகிய இரண்டு உலாவிகளும் உலகத்தில் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இணைய உலாவி சுருக்கமாக உலாவி என்றும் அழைக்கப்படுகின்றது.

web browsing centre:வலை உலா மையம்.

Webcasting:வலைப்பரப்பு.

web counter:வலை எண்ணி.

web crawler:வெப்கிராலர்.அமெரிக்கா ஆன்லைன் நிறுவனத்தின் வைய விரிவலைத் தேடுபொறியின் பெயர்.

web designing:வலைப்பக்க வடிவமைப்பு.

web development:வலைசார் உருவாக்கம்: வைய விரிவலைப் பக்கங்களை வடிவமைத்தலும் நிரலாக்கலும்.

web directory:வலைக்கோப்பகம்: வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப்பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும்.

web events:வலை நிகழ்வுகள்.

web form:வலைப் படிவம்.

web graphics:வலை வரைகலை.

Web index:வலைச் சுட்டுகை: பயனாளர் ஒருவர்,இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத்தளம். வலைச் சுட்டுகை, தேடுகின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தனி மீத்தொடுப்பு களை மட்டுமே கொண்டிருக்கலாம்.

webmaster:தளநிர்வாகி; தளத் தலைவர் : ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர் மின்னஞ்சல் களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப் பக்கங்களை உருவாக்குதல், புதுப் பித்தல், தளத்தின் ஒட்டுமொத்தக்