பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

white board window

488

wildcard characters


மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்தில் ஆவணம் திறக்கப்படும். ஒரு கரும்பலகையில் எழுதப்பட்ட விவரங்களைப் பலரும் கூடிநின்று படிப்பதைப் போல.

white board window:வெண்பலகைச் சாளரம்.

white paper:வெள்ளை அறிக்கை: பெரும்பாலும் ஒருதொழில்நுட்பத் தகவல்பற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல்.

who is:ஹூஇஸ்:யார் எவர்?: 1.இணையத்தில் சில களங்கள் (domains) வளங்கும் சேவை,அக்களத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள தரவுத் தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளையும், பயனாளர்கள் பற்றிய வேறுசில தகவல்களையும் பயனாளர் ஒருவர் அறிந்துகொள்ள இச்சேவை உதவுகிறது. 2."யார்எவர்" சேவையைப் பெறப்பயன்படும் யூனிக்ஸ் கட்டளை.3.நாவெல் பிணையத்தில் அந்த நேரத்தில் நுழைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்துப் பயனாளர்களின் பெயர்களையும் பட்டியலிடும் கட்டளை.

who is client:ஹூஇஸ் ஹிளையன்ட்: யார் கிளையன் பயனாளர் பெயர்கள்,மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய தரவுத் தளத்தை அணுகுவதற்குப் பயனாளர்க்கு வாய்ப்பளிக்கும் ஒரு கட்டளை.(யூனிக்ஸில் உள்ள ஹூஇஸ் கட்டளை போன்றது).

who is server:ஹூஇஸ் செர்வர்; வழங்கன் யார் ஹூஇஸ் கிளையன்ட் கட்டளை மூலம் தகவல் அறிய விரும்பும் ஒரு பயனாளருக்கு தரவுத் தளத்திலிருந்து பயனாளர் பெயர்கள். மின்னஞ்சல் முகவரிகளை (பெரும்பாலும் ஒர் இணையக் களத் தினில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பட்டியல்) வழங்குகின்ற மென்பொருள்.

widelbroad band:அகல/விரிக்கற்றை.

wide SCSI or Wide SCSI-2:விரிந்த ஸ்கஸ்ஸி அல்லது விரிந்த ஸ்கஸ்லி-2: ஒரு நேரத்தில் 16 துண்மி(பிட்)கள் வீதம் வினாடிக்கு 20 மெகாபைட்டுகள் வரை தகவல் பரிமாற்றம் செய்யக் கூடிய ஸ்கஸ்ஸி-2 இடைமுகம். இவ்வகை ஸ்கஸ்ஸி இணைப்பியில் 68 பின்கள் உள்ளன.

width:அகலம்.

width, tape:நாடா அகலம்.

widow:துணையிலி: முந்தைய பக்கத்திலுள்ள இறுதிப் பத்தியின் இறுதிவரி முழுவரிக்கும் குறைந்த நீளமுடையது-அடுத்த பக்கத்தில் இடம் பெறுவது. அச்சிடப்படுகின்ற பக்கத்தில் இவ்வாறு ஒற்றை வரி தனியாக நிற்பது பொதுவாக விரும்பப்படுவதில்லை. பெரும்பாலான சொல்செயலிகளில் துணியிலிகளைத் தவிர்க்க வழிமுறைகள் உள்ளன. காண்க: Orphan.

wildcard characters:பதிலீட்டுக் குறிகள்: ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறி.பெரும்பாலும் நட்சத்திர அடையாளம் (') ஒரெழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலாக இடம் பெறும். கேள்விக்குறி (?) ஓரெழுத்துக்குப் பதிலாக இடம் பெறும்.இயக்க முறைமைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை,அதாவது குறிப்பிட்ட கோப்புகளின் தொகுதியைக் கையாள இக்குறிகள்