பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

WOSA

494

Writemode



களைக் கண்காணித்து சிறந்த தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வணிக மற்றும் கல்வி நிறுவனங் களின் கூட்டமைப்பு. சுருக்கமாக டபிள்யூ3சி(W3C) என்றழைக்கப்படும்.

WOSA :வோசா: விண்டோஸ் திறந்த நிலை முறைமைக் கட்டுமானம் என்று பொருள்படும். Windows Open System Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வெவ்வேறு விற்பனையாளர்கள் உருவாக்கும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் (APls) தொகுப்பு. திறந்தநிலை தரவுத் தள இணைப் புறுத்தம் (Open Data Base Connectivity-ODBC),செய்தியனுப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Messaging Application Programming Interface- MAPI) தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Telephone Application Programming Interface-TAPI) விண்டோஸ் பொருத்துவாய்கள் (Windows Sockets - Winsock) மைக்ரோசாஃப்ட் தொலை நிலை செயல்முறை அழைப்புகள் (Remote Procedure Calls-RPC) ஆகியவை,வோசாவில் அடக்கம்.

.wp:.டபிள்யூபீ வேர்டு பெர்ஃ பெக்ட் எனப்படும் (கோரல் நிறுவன வெளியீடு) சொல்செயலி மென்பொருளில் உருவாக்கப்படும் ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).

WRAM :டபிள்யூரேம்: சாளர குறிப்பிலா அணுகு நினைவகம் என்று பொருள்படும் Window Random Access Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சித் தகவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை ரேம். ஒளிக்காட்சி ரேம் (VRAM) போலவே, ஒரு வரைகலைப் படிமம் எழுதப்படும் போதே திரையை மறுவண்ணமிட (Repaint) டபிள்யூ ரேம் அனுமதிக் கிறது. ஆனால், விரேமைவிட டபிள்யூரேம் வேகம் அதிகம் கொண்டது.

wrap round : மடங்கித்தடுப்பு.

.wri:.டபிள்யூஆர்ஐ: மைக்ரோ சாஃப்டின் ரைட் (write) பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட் டும் கோப்பு வகைப்பெயர்.

write-behind cache:எழுதும் முன் இடைமாற்று: நிரந்தரச் சேமிப்புக்காக வட்டில் எழுதப்படுவதற்கு முன்பாக தகவலை இடைமாற்று நினைவகத்தில் குறுகிய நேரம் இருத்திவைக்கும் தற்காலிகச் சேமிப்பு முறை. இவ்வாறான இடை மாற்று நடவடிக்கை பொதுவாகக் கணினியின் செயல் திறனைக் கூட்டும். ஒப்புநோக்கில் மெதுவாகச் செயல்படும் வட்டில், எழுதவும் படிக்கவும் அடிக்கடி அணுகவேண்டிய தேவையைக் குறைப்பதால் இது இயல்வதாகிறது.

written media : எழுத்து ஊடகம்.

write mode:எழுது பாங்கு: கணினிச் செயல்பாட்டில், ஒரு நிரல் ஒரு கோப்பில் எழுத (பதிய) முடிகின்ற நிலை. எழுது பாங்கில் ஒரு கோப்பில் ஏற்கெனவே இருக்கும் தகவல்களை மாற்றியமைக்க அனுமதிக்கப்படுகிறது.