பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cascade

80

case sensitivity


cascade : அடுக்கு : தொடர்: கவிப்பு : சீட்டு விளையாட்டில் கையில் சீட்டுகளை ஒன்றடுத்து மற்றொன்றை அடுக்கி வைத்திருப்பதுபோல, அடுக்கி வைக்கும் முறை, விண்டோஸ் பணிச்சூழலில் ஒரு நேரத்தல் திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட

அடுக்கு

சாளரங்களை இம்முறையில் அடுக்கி வைக்கலாம். 1. ஒரு சாளரத்தில் அமையும் உரையாடல் பெட்டியில் (dialog box) 2-angloGullig (text box), பட்டியல் பெட்டி (list box), தேர்வுப் பெட்டி, (check box), கட்டளைப் பொத்தான்கள் (command buttons) போன்ற அனைத்து இயக்குவிசைப் பொருட்களையும் ஒரே திரையில் அமைக்க முடியாதபோது ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளில் அவற்றை அடுக்கி வைப்பர் 2. இணையச் செய்திக் குழுக்களில் ஒரு செய்தி ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு அனுப்பப்படும்போது மூலச்செய்தியில் ஒவ்வொரு வரியிலும் > என்ற அடையாளம் சேர்க்கப்படும். அவரிடமிருந்து இன்னொருவர்க்குப் போகும்போது இன்னொரு அடையாளம் சேர்க்கப்படும். இதுபோல் சேர்ந்துகொண்டே போகும்.

cascading windows : அடுக்கிவைத்த சாளரங்கள் வரைகலைப் பணிச்சூழலில், தலைப்புப்பட்டை தெரியும் வண்ணமாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் பல்வேறு சாளரத் திரைகள்.

case control structure : நிலைக்கட்டுப்பாட்டு அமைப்பு.

case logic : எழுத்துருவ தருக்கம்.

case-sensitive search : எழுத்து வடிவ உணர்வுத் தேடல் : ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த எழுத்துகளில் எழுதலாம். தேடும்போது வடிவ ஒப்புமை இல்லாமலும் தேடலாம். ஒர் ஆவணத்தில் Computer என்ற சொல் உள்ளதா எனத் தேடும்போது, COMPUTER, computer என்ற சொற்களையும் கண்டறிந்து சொல்லும். ஆனால், வடிவ அடிப்படையில் தேடினால், Computer என்ற சொல் இருந்தால் மட்டுமே உள்ளதெனக் காட்டும் computer, COMPUTER ஆகிய சொற்களைப் புறக்கணிக்கும்.

case sensitivity : எழுத்து வடிவ உணர்வு : ஒரு நிரலாக்க மொழியில், ஒரு நிரலில் சிறிய எழுத்து பெரிய எழுத்து வடிவங்களை வேறு படுத்திப் பயன்படுத்துதல். எடுத்துக்