பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Case Staternent

81

CC


காட்டாக சி,சி++ மற்றும் ஜாவா மொழிகளில் sum, SUM, Sum ஆகிய மூன்று சொற்களும் வேறு வேறாகவே அறியப்படும். எழுத்து வடிவ உணர்வு மிக்கவை என்று இம்மொழிகளைக் கூறுவர். ஆனால் பேசிக், பாஸ்கல் போன்ற மொழிகளில் மேற்கண்ட மூன்று சொற்களும் ஒன்றாகவே கருதப்படும். இம்மொழிகள் வடிவ உணர்வற்ற மொழிகள்.

case statement : கிளைபிரி கூற்று : அடா, பாஸ்கல், சி, சி++, ஜாவா மற்றும் விசுவல் பேசிக் மொழிகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கட்டளைத் தொடர். ஒரு மாறியின் மதிப்பைச் சோதித்து அம்மதிப்பின் அடிப்படையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கட்டளை ஒன்றுக்குள் ஒன்றாக அமையும் if....then....else கட்டளைக்குப் பதிலாக சில சூழ்நிலைகளில் கிளைபிரி கட்டளையமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

catena : தொடுப்புப் பட்டியல் : பல்வேறு உறுப்புகளைச் சேர்த்துத் தொடுக்கப்பட்ட ஒரு பட்டியலில் ஒர் உறுப்பு, பட்டியலில் உள்ள அடுத்த உறுப்பினைச் சுட்டுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

catch : பிடி.

cat eye : பூனைக் கண்.

catalogue : பட்டியல்;அடைவு

category : வகையினம்

category storage : வகையினச்சேமிப்பகம்

cathode ray tube (CRT) : எதிர்மின்வாய் கதிர்க் குழாய்.

cathode ray tube visual display unit: எதிர்மின்வாய்க் கதிர்க்குழாய் காட்சி திரையகம்.

ca.us : சிஏ.யு.எஸ் : இணையத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த வலைத் தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

CBT : சிபிடீ : கணினி அடிப்படையிலான பயிற்சி என்ற பொருள்படும் Computer Based Training stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியையும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருளையும் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை. இம்முறையில் உரைக் கோவை மட்டுமின்றி, வண்ணமிக்க வரைகலைப் படங்கள், அசைவூட்டப் படங்கள் மற்றும் குரல் மூலமான விளக்கங்கள் உட்பட பயனாளரை ஈர்க்கும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பயன்படுத்த எளிமையானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் தன் மென்பொருளைப் பயன்படுத்துபவருக்கு அம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளையே. ஒரு சிபிடீ-யாகத் தயாரிக்க முடியும். ஒரு மேலாண்மைத்துறைக் கருத்தரங்கில் சிபிடீ-யை ஒரு சிறந்த கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்தலாம்.

CC : சிசி, நகல் : உண்மை நகல் என்று பொருள்படும் Carbon Copy அல்லது Courtesy Copy என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் மென்பொருளில் வழியுள்ளது. To என்பதில் அஞ்சல் பெறுபவரின் முகவரியைத் தரவேண்டும். CC என்பதில் வேறு ஒருவரின் அல்லது பலரின் முகவரியைத் தரலாம்.