பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
all
ana
15

ஆராய்வியும் வலைய நோக்கு செலுத்தியும் இந்த இணைப்புகளைச் சிவப்பாகக் காட்டும். இந்த இயல்பு இந்நிறத்தை மாற்ற உதவும்.Alink-active link.

allocation - Earmarking complete programmes to a storage system.
ஒதுக்கீடு:ஒரு சேமிப்புத் தொகுதிக்குரிய முழு நிகழ்நிரல்களைக் குறித்தல்.

alphabetic string-
பா.character string.

alphanumeric-
எண்ணெழுத்து : எழுத்து,எண்,குறி,உரு முதலியவற்றைக் கொண்டது.

alphascope-An interactive device.
அல்பாநோக்கி:ஓர் இடை வினைப்படும் கருவியமைப்பு.

alternate method of formatting-
படிவமைப்பு மாற்று முறை :ஒரு குறிப்பிட்ட பாணியை உருவாக்கி, அதை ஓர் ஆவணத்திற்குப் பயன்படுத்தல். வரி இடை வெளிவிடல், பத்தி வரிசையாக்கம், ஒதுக்கிச் செய்தல் முதலியவை இதில் தேவைப்படா.

alteration switch- sense switch
மாற்றுச் சொடுக்கி :நுண்ணுணர் சொடுக்கி

aiter clause-
மாற்று உட்பிரிவு:உட்பிரிவுகளில் ஒருவகை.

ALU,Arithmetic and Logic Unit -
ஏஎல்யூ:எண்கணித மற்றும் முறைமை அலகு.

Ambalam-
அம்பலம்: ஒரு மின்னிதழ்.1999 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. சென்னை டிஷ் நெட்டிலிருந்து வருவது.பா.Minambalam.

ambiguity error- An error in reading a number in two ways,eg 699-799.
இருமைப்பிழை:ஓர் எண்ணை இருவழிகளில் படிப்பதிலுள்ள பிழை. எ-டு 699-799.

amplitude-The magnitude of a variable.
வீச்சு:ஒரு மாறியின் அளவு.

analogue- 1.Having a continuous range of values.
2.Things in the real world.
1)ஒப்புமை:தொடர் மதிப்பு எல்லைகளைக் கொண்ட
2)மெய்ப்புமை:உண்மை உலகப்பொருள்கள்.

analogue computer-That which produces continuously varying signals.
ஒப்புமைக் கணிப்பொறி: தொடர்ந்து மாறுபடும் குறிகளை உண்டாக்குவது.

analogue signal-An electronic signal got by variations in the signal voltage; a continuous wave on like digital signal.

ஒப்புமைக் குறிகை: குறிகை