பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பட முடியுமா? 5 உணவைப் பற்றி கான் அச்சம் அடையவில்லை. பாலேயும் பழத்தையும், ரொட்டியையும் வெண்ணெயையும் சாப்பிட்டே எத்தனை மாதங்களானலும் இருப்பதற்குரிய பயிற்சி எனக்கு உண்டு. ஆனல் அங்கே எந்த உடையோடு செல்வது? முன்னே சொன்னபடி வேட்டியோடு செல்ல வேண்டுமென்று கினைத்தேன். ஒருகால் கொஞ்சம் குளிராக இருந்தால், சால்வை எடுத்துக்கொண்டு போகலாம். இருந்தாலும் பின்னியின் காட்ஸ்வுல் வாங்கி இரண்டு *ஷர்ட்டு மாத்திரம் தைத்துக்கொண்டேன். காலில் "ஸாக்ஸுடன் 'ஷாஅ போட்டுக்கொள்ளத் தீர்மானித் தேன். மற்றப்படிக் கதர் வேட்டியோடு எங்கும் உலாவலாம் என்ற தைரியம் உண்டாயிற்று.

தமிழக அரசினர் ஏர் இந்தியா மூலம் எனக்குரிய விமான டிக்கட்டைத் தந்தார்கள். அந்தப் பயணச் சீட்டுக் குரிய கட்டணம் ரூ. 6856-20. தமிழ் விழாவுக்கு வர இருந்த மற்றவர்களே விசாரித்தேன். பாரிஸுக்குப் போய் வரும் வழியில் இடையில் பல நாடுகளுக்குச் செல்லலாம் என்றும், அதற்காகத் தனியே பயணச் சீட்டு வாங்க வேண்டாம் என்றும் தெரிய வங்தது. லண்டனுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. பாரிஸிலிருந்து லண்டனுக்குரிய கட்டணத்தைச் செலுத்தி டிக்கட் வாங்கிக் கொள்ளலாம் என்ருர்கள். பிரதிநிதிகளில் ஒருவராகிய அன்பர் திரு சா. கணேசனேடு கலந்து ஆலோசித்தேன். பல கருத்துக்களில் நாங்கள் இருவரும் ஒன்றுபடுகிறவர்கள். ஆகவே இருவரும் சேர்ந்தே பயணத்துக்குத் திட்டம் வகுக்கலாம் என்று எண்ணினேம். முதலில் பாரிஸுக்கு நேரே போய்விட்டு, மாநாட்டில் கலந்துகொண்டு, மேலும் இரண்டு நாள் தங்கலாம் என்றும், அங்கிருந்து லண்டன் போகலாம் என்றும் கினைத்தோம். அதன் பிறகு ஜெர்மனி, ஸ்விட்ஜர்லாந்து, இத்தாலி, எகிப்து முதலிய நாடுகளுக்கும் முடிந்தால் போய்வருவது என்று முடிவு பண்ணினுேம். சில நாடுகளுக்கு இங்கே விஸா வாங்கினுேம் பாரிஸிலோ