பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கண்டறியாதன கண்டேன்

லண்டனிலோ மற்ற நாடுகளுக்குச் செல்ல விஸா வாங்கிக் கொள்ளலாம் என்பது எங்கள் நினைவு.

தமிழக அரசினர் பாரிஸுக்குப் போய்வர டிக்கட் தந்ததோடன்றி, அங்கே ஆகும் செலவுக்கும் பணம் ஒரளவு வழங்கினர். ஒரு நாளேக்கு ஒன்பது பவுன் வீதம், ஆறு காளேக்கு ஐம்பத்துநாலு பவுன் தந்தார்கள். ஒரு பவுன் மதிப்பு, பதினெட்டு ரூபாய். அவற்றுக்குரிய 'டிராவலர்ஸ் செக்"கை ஒரு பாங்கில் வாங்கிக் கொண்டேன். பம்பாய் விமான நிலையத்தில் பணம் கொடுத்தால் ஆறு டால்ர் தருவார்கள் என்று தெரிந்தது. இவ்வாறு பயணத்துக்கு வேண்டிய தீட்சைகளையெல்லாம் பெற்று, வேண்டிய வற்றைச் சேமித்துக்கொண்டேன்.

உலகத் தமிழ் மாநாட்டுக்குத் தமிழ் நாட்டிலிருந்து செல்லும் குழுவினர் எல்லோரும் ஒரே நாளில் புறப்பட வில்லை. முன்பே சிலர் புறப்பட்டு விட்டார்கள். ஜூலை மாதம் 10-ஆம் தேதி அமைச்சர் மாண்புமிகு மதியழகளுேடு செல்வதாகச் சிலர் இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொள்ளலாம் என்று எண்ணினேன். முன்பே போயிருப்பேன். ஆ ைலும் 9-ஆம் தேதியன்று சிவகிரியில் முருகப் பெருமானுடைய சங்கிதானத்தில் பேசுவ தாக ஒப்புக்கொண்டிருந்தேன். ஏற்றுக்கொண்டதைக் கூடியவரையில் தவருமல் கிறைவேற்ற முயல்வது என் வழக்கம். அன்றியும் இந்தச் சொற்பொழிவு காரணமாக என் பயணத்துக்குச் சிவகிரி முருகனுடைய அருளேயும் பெற்று வரலாம் என்ற ஊக்கமும் எனக்கு உண்டாயிற்று. 9-ஆம் தேதி அங்கே சென்றேன். 10-ஆம் தேதி அங்கே கும்பாபிஷேகம் நடக்க இருந்தது. முதல் நாளில் சென்ற எனக்குப் பெறற்கரிய வாய்ப்பொன்று கிடைத்தது. கும்பாபிஷேகம் செய்த பிறகு மூர்த்திகளைத் தொட முடியாது. கர்ப்பக் கிருதத்துக்குள் போகவும் முடியாது. ஆனல் கும்பாபிஷேகத்திற்கு முன்பு யார் வேண்டுமானலும்