பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கண்டறியாதன கண்ட்ேன்

தமிழை எங்கும் பரப்பும் கிலே வந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியும் தமிழ் மொழியும் பரிமாறிக்கொள்ள வேண்டும். இதற்கு இந்த மன்றம் துணையாக இருக்கும் என்று நம்பு கிறேன்' என்ருர்.

தமிழக அமைச்சராக இருந்த மதியழகன், 'இந்த மாணவர் மன்றம் தக்க சமயத்தில் தோன்றுகிறது. இதை வாழ்த்தத் தமிழுலகமே இங்கே வந்திருக்கிறது. மாணவர் கள் பாக்கியசாலிகள்' என்று வாழ்த்தினர்.

அவருக்குப் பின் திரு பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் பேசினர். அவர் தமிழ் நாட்டில் சில காலம் வாழ்ந் தவர். அவர் முதலில் தமிழில் உரையாற்றினர். அமெரிக் கர் ஒருவர் தமிழில் பேசுவது வேடிக்கையாகவே இருந்தது. சிறிது நேரம் தமிழில் பேசிவிட்டுப் பிறகு ஆங்கிலத்தில் பேசினர். 'காரைக்குடியில் அருமையான காபி கிடைக்கும்: அது மாதிரி காபி எங்கும் கிடைக்கிறதில்லை என்ருர், "இந்த கிகழ்ச்சியில் உங்களோடு இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்வில் நெடுநாள் கழித்துத் தமிழ் படிக்கக் தொடங்கினேன். சில மாதம் மதராஸிலிருந்து தமிழை நன்ருகப் பேசுவேன்' என்ருர்.

பிறகு ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் கெல்லர் பேசினர். அவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழியிலும் பேசினர். அப்போது சபையில் பெரிய ஆரவாரம் எழுந்தது. 'தமிழில் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று ஜமாலுதீன் கேட்டபோது முடியாது என்றேன். பேச வேண்டுமென்று மறுபடியும் சொன்னர். சென்னையில் தமிழ் மகாகாட்டில் கல்சரல் டுரில் சேர்ந்தேன். சிவஞான கிராமணி அழகான பிரசங்கம் செய்தார்கள். அதல்ை ஒரு திவ்யசக்தி உண்டாயிற்று. பிறகு நான் பிரசங்கம் செய்தேன். அது சிவஞான கிராமணியின் திவ்ய சக்தி' என்று பேசும்போது திவ்ய சக்தி என்பதை அழுத்திச் சொன்னர். அப்போது யாவரும் சிரிப்பொலி 4.எழுட்பி ஆரவாரித்தனர். 'மலையாளம் கொஞ்சம் சம்சாரிப்