பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கண்டறியாதன கண்டேன்

வேண்டும். மேல் நாட்டில் பிரெஞ்சும் தமிழின் தொடர் பால் வளர வேண்டும். தமிழிலும் பிற மொழிகளில் முன்னேறி வருகின்ற கருத்துக்கள் வர வேண்டும்' என்ருர்.

அப்பால் திரு ம. பொ. சி, பேசினர், அந்தப் பேச்சு அழகாகவும் உணர்ச்சியுள்ளதாகவும் அமைந்தது. கருத் தழகும் ஆற்றலழகும் பொருந்திய பேச்சு அது. சபையினர் அந்தப் பேச்சை மிக நன்ருகச் சுவைத்துக் கை தட்டிப் பாராட்டினர். அவர் பேசியதன் சாரம்:

காளைக்கு நான் இங்கிருந்து புறப்படுகிறேன். ஆங்கி லத்திலேயே ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற் றன. இங்கே பேசுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடை காதோ என்று எண்ணினேன். மாணவர்கள் எனக்கு இங்கே பேச இடம் கொடுத்தார்கள். --

தமிழ் நிலத்தின் சிறிய நகராகிய புதுவையைப் பிரெஞ்சுப் பேரரசு ஆண்டு வந்தது. அடிமைப்பட்டிருக் கிருேம் என்ற எண்ணமே இல்லாமல் மக்களை அங்கே வாழச் செய்தது. ஆங்கிலப் பேரரசு மற்ற இடங்களே ஆண்டு வந்தது. ஆனால், நாம் அடிமைகள் என்ற உணர்வு நமக்கு இருந்தது. ஆங்கில அடிமைத் தளையைத் தாங்க முடியாமல் சென்றவர்களுக்குப் புதுவையரசு புகலிடம் தந்தது. இந்த வாய்ப்பைப் புதுவை தந்திராவிட்டால் பாரதியாரின் சிறந்த படைப்புக்களே. நாம் பெற்றிருக்க முடியாது. பாஞ்சாலி சபதமும், குயில் பாட்டும் அங்கே எழுந்தன. அவை அவரை மகாகவி ஆக்கின. தேசியப் பாடல்கள் பாடியதால் அவர் தேசீய கவி ஆனர். கண்ணன் பாட்டு முதலியவற்ருல் அவர் தெய்விக கவி என்று ஒப்புக்கொள்ளப்பட்டார். ஆனல் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்பவற்றைப் பாடிய பிறகே புலவர்கள் அவரை மகாகவி என்று ஏற்றுக்கொண்டார்கள்.

புதுவை புகலிடம் தந்திராவிட்டால் வ. வே. சு. ஐயர் திருக்குறளின் முப்பாலையும் மொழி பெயர்க்க வாய்ப்பு