பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டறியாதன கண்டேன்

10-ஆம் தேதி மாலையில் புறப்பட்டுப் பம்பாய் வரைக்கும் 'இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வது என்றும், இரவு அங்கே தங்கி, 11-ஆம் தேதி காலே 8 மணிக்கு அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேரே பாரிஸுக்குச் செல்வது என்றும் தீர்மானம் ஆயிற்று.

10-ஆம் தேதி அன்று மாலையில் விமானகிலேயத்துக்குச் சென்றேன். அங்கே அமைச்சரை வழி அனுப்பப் பெருங் கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்துக்குள் புகாமல் கான் தனியாக இருந்தேன். மலை மலையாக மாலைகளை அமைச்சருக்குப் போட்டார்கள். பெருங் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு சென்று அவரைப் பார்க்கவும் படம் பிடிக்கவும் நெருங்கியது. நான் தனியே இருந்தாலும் பல அன்பர்கள் என்னேயும் நாடி வந்து மாலையிட்டார்கள். கலைமகள் காரியாலயத்தினரும், முருகனடியார் சங்கத் தாரும், தனி அன்பர்களும் வந்து மாலையிட்டு வாழ்த்துக் கூறினர்கள். பின்பு யாவரும் விமானத்தில் ஏறினேம். விமானம் மாலை 6-10-க்குப் புறப்பட்டது.

பம்பாயை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது. தமிழ்நாட்டு நிதி அமைச்சர் மாண்புமிகு மதியழகன் அவர்களும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ஃபரூக் அவர்களும், திரு.சா. கணேசன், திரு கா. அப்பாத்துரை, திரு வி. எஸ். தியாகராஜ முதலியார், திரு பி. ஜி. கருத்திருமன், திரு ஜர்ைத்தனம் ஆகிய அன்பர்களும் உடன் வந்தார்கள். திரு மதியழகனுடைய செயலாளராகத் திரு வேங்கடசுப்பிரமணியன் வந்தார். விமானப் பயணம் எனக்குப் புதிது அன்று. வெளி காட்டுப் பயணமும் புதிது அன்று. மலேசியா, பர்மா, இலங்கை ஆகிய இடங்களுக்குப் போயிருக்கிறேன். அங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிருர்கள். நம் உடையோடு சுற்றலாம். நமக்கு ஏற்ற உணவு எளிதில் கிடைக்கும். இப்போது முற்றும் வேறுபட்ட நாட்டுக்குப் போகிறேன். அங்கே எத்தகைய சூழ்கில் இருக்குமோ? வெப்ப தட்ப கிலே எப்படி இருக்குமோ?' என்ற எண்ணம்