பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பட முடியுமா? 9.

சற்றே உள்ளத்தில் தோன்றிலுைம், அங்கே வேண்டிய உதவி செய்கிற அன்பர்கள் கிடைப்பார்கள் என்ற தைரியம் எனக்கு இருந்தது. நான் அடிக்கடி சொல்லும், x

"பொங்கார வேலையில் வேலைவிட்டோன்

அருள்போல் உதவ எங்காயினும் வரும்'

என்ற கந்தர் அலங்காரப் பாட்டை கினைவூட்டிக் கொண்டேன்.

போகும்போது விமானத்தில் தினமணி அதிபரின் குமாரர் திரு பகவன்தாஸ் கோயங்கா பம்பாய் வரையில் உடன் வந்தார். அவர், 'உலகத் தமிழ் மகாகாட்டு நிகழ்ச்சியைப்பற்றித் தினமணிக்குச் செய்தி அனுப்ப வேண்டும். நீங்களே அதற்கு ஏற்றவர்' என்று சொன்னர். அப்படியே செய்வதாக ஏற்றுக்கொண்டேன்.

விமானம் போய்க்கொண் டிருந்தபோது திருவாரூர் அன்பர் திரு வி. எஸ். தியாகராஜ முதலியார் ஒரு பொட்டலத்தை அவிழ்த்தார். அதில் நல்ல நெய்யிலே செய்த தேங்குழல் இருந்தது. 'இது தியாகராஜப் பெருமானுடைய பிர சா தம். நம் பிரயாணத்துக்கு இறைவனுடைய பிரசாதம் துணை செய்யும் என்ற எண்ணத்தில் வரவழைத்தேன். முதல்வருக்கும் கொடுப்ப தாக இருக்கிறேன்' என்று சொல்லி அதை விகியோகித்தார். தியாகராஜப் பெருமானின் கினைவோடு அதனை உண்டு மகிழ்ந்தோம். அதில் நெய் மணந்தது; எனக்குத் தெய்வத் திருவருளும் மணந்தது. -

விமானம் பம்பாயில் இரவு 8-15க்கு இறங்கியது. அங்கே அமைச்சரை வரவேற்பதற்குப் பலர் காத்திருந் தார்கள். பம்பாயில் உள்ள என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் என்னுடைய பெட்டியை எடுத்து வைத்தேன். மறுநாள்