பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கண்டறியாத்ன கண்டேன்

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு மகராஜன் பேசும் போது, "குற்றம் கூறும் உரிமை உள்ளவனே புகழும் உரிமையைப்பெறுகிருன். இந்த விழாவை அமைத்தவர்களே நான் பாராட்டுகிறேன். இதுவரையில் மூன்று விழாக்கள் கடைபெற்றன. இந்த மூன்றிலும் வேண்டுமென்றே கம்பன ஒதுக்கி வைத்துவிட்டார்களே! ஏன் என்று தெரிய வில்லை. கம்பனைப் போன்ற மாபெருங் கவிஞனே உலகில் பார்க்க முடியுமா? ஓரிருவர் இருக்கலாம். அத்தகைய கவிஞனைப் புறக்கணித்தது நியாயமாகாது' என்று கூறினர். அந்த கியாயமற்ற செயலே அவர் எடுத்துக் காட்டியதைப் பலர் ஆமோதித்திருப்பார்கள்.

ஸ்வீடன் தேசத்திலிருந்து வந்திருந்த இங்க்வே ஃபிரைக் ஹோம் (Yngve Frykholm) என்பவர் தாம் திருக்குறள் முழுவதையும் ஸ்வீடிஷ் மொழியில் ஆக்கியிருப்பதாகச் சொன்னர். மொழிபெயர்ப்பது எவ்வளவு அரிய செயல் என்பதை அவர் எடுத்துச் சொன்னர். வேறு பலரும் நன்றி பாராட்டிப் பேசினர்கள்.

நான்கு மணிக்கு இந்த விழா கிறைவேறியது.

பாரிஸ் மாநகரத்தில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. பிப்ளியோதெக் காசியனேல் என்ற இந்தக் கலைக் கோயிலில் இருந்த ஜூலியன் வின்ஸனைப்பற்றி முன்பு ஒரு முறை. சொல்லியிருக்கிறேன். அங்கே பல தமிழ் ஏட்டுச் சுவடி களும் கையெழுத்துப் பிரதிகளும் பழங்காலத்தில் அச்சான தமிழ்ப் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றை ஓர் அறையில் வைத்து த் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வந்தவர் களுக்குக் காட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். விழா முடிந்தவுடன் விழாவில் கலந்துகொண்ட பலரும் அங்கே சென்று அந்த நூற்காட்சியைக் கண்டு இன்புற்ருேம்.

பிப்ளியோதெக் காசியனேல் என்ருல் தேசிய நூலகம் என்று பொருள். 1720ஆம் ஆண்டில் இரண்டு லட்சம்