பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கந்தர்வ நகரம்

'ஹெல்த் சர்ட்டிபிகேட்டைத் தியானித்துக் கொண்டு அசடு வழிய கின்றிருந்த என்னைக் கண்ட திரு வி. எஸ். தியாகராஜ முதலியார், 'என்ன, ஒரு, மாதிரியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். கான் செய்தியைச் சொன்னேன். 'நீங்கள் கவலைப்படாதீர்கள்: அதை வருவிக்க ஏற்பாடு செய்யலாம்' என்று சொல்லித். திரு பகவன்தாஸ் கோயங்காவை அழைத்தார்.

"டெலிபிரின்டர் மூலம் இந்தச் செய்தியை உங்கள் சென்னைக் காரியாலயத்துக்கு அனுப்பி, கி. வா. ஜ. வீட்டுக்குப் போன் செய்து, அடுத்த விமானத்தில் ஹெல்த் சர்ட்டிபிகேட்டை அனுப்பச் சொல்லுங்கள்' என்ருர். அவர் அப்படியே பம்பாய் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" அலுவலகத்திலிருந்து சென்னைக்குச் செய்தி அனுப்ப ஏற்பாடு செய்தார். -

இரவு சென்னையில் புறப்படும். விமானம் காகபுரி வழியாகக் கல்கத்தாவுக்கு வரும். அந்த விமானம் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன் இந்தச் செய்தி போனல் வீட்டில் உள்ளவர்கள் எப்படியாவது சர்ட்டிபி கேட்டை எடுத்து அனுப்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதே சமயத்தில் வேறு சந்தேகங்களும் எழும்பின. நான் அதை வைத்திருக்கும் இடம் அவர் களுக்குத் தெரிய வேண்டுமே! விமான நிலையத்துக்கு வந்து யாரிடம் கொடுப்பார்கள்? விமான ஒட்டியிடம் கொடுத்தால்