பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"12 கண்டறியாதன கண்டேன்

அவர் காகபுரியில் மாறவேண்டியிருக்கும். நாகபுரியிலிருந்து பம்பாய் வரும் விமானப் பைலட்டிடம் அவர் ஞாபகமாகச சேர்க்க வேண்டுமே! வேறு பிரயாணிமூலம் கொடுத்து அனுப்பினல் அவர் இங்கே வந்து யாரிடம் கொடுப்பாரோ?இப்படியெல்லாம் பல பல எண்ணங்கள் என் மனத்தை அலைத்தன. ஏர் இந்தியாக்காரர்களிடமும் சொல்லிச் சென்னைக்குச் செய்தி அனுப்பச் சொன்னேன்.

இரவு தங்குவதற்குப் பம்பாய் அஜந்தா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னைப் பார்ப்பதற்கு விமான கிலேயத்துக்கு வந்திருந்த என் உறவினர் ஒருவர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற கம்பெனியில் பயணத் துறையில் பொறுப்பான வேலை பார்க்கிறவர். அவருடன் அஜந்தா ஹோட்டல் போனேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸி லிருந்து டெலிபிரின்டரில் செய்தி போய், ஹெல்த் சர்ட்டிபி கேட்டைக் கண்டுபிடித்து அனுப்பினர்களா என்பதை டிரங்க் போன்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்ற யோசனை தோன்றியது. ஹோட்டலிலிருந்து டிரங்க் போன் செய்ய முயன்றேன். நாம் நினைத்தால் உடனே போன் தொடர்பு கிடைத்துவிடுகிறதா? மணி ஆகிக் கொண்டே இருந்தது. மனம் துடித்துக்கொண்டே இருந்தது. அப்பாடா டிரங்க் போன் தொடர்பு கிடைத்தது. வீட்டில் உள்ளவர்களோடு பேசினேன். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலிருந்து செய்தி வந்தது. ஹெல்த் சர்ட்டிபிகேட்டை எடுத்துக்கொண்டு விமான கிலேயம் போய் அரை மணி ஆகிறது. யாரிடமாவது கொடுத்தனுப்புவார்கள்' என்ருர்கள். கொஞ்சம் ஆறுதல் பெற்றேன். ஆனல் முழு ஆறுதல் உண்டாகவில்லை. யாரிடம் கொடுத்தனுப்புவார்களோ? அது நம்மிடம் எப்படி வந்து சேருமோ?

ಫೆr உறவினர். "எங்கள் வீட்டுக்கு வாருங்கள், அங்கே படுத்திருந்துவிட்டு விடியற்காக விமான கிலேயத்துக்கும். போகலாம். யாரேனும் பைலட்மூலம் கொடுத்தனுப்பி