பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கண்டறியாதன கண்டேன்

கீழ்த்தளத்தில் கிழக்குப் பகுதியில் அச்சுப் புத்த கங்கள், கையெழுத்துப் புத்தகங்கள், இசை சம்பந்தமான ஏடுகள், தபால் முத்திரைகள் ஒருபால் காட்சி தருகின்றன. வரலாற்ருேடு தொடர்புடைய மாக்னகார்ட்டா போன்ற சாசனங்களும் பிறவும் ஒரிடத்தில் உள்ளன. அரசர் நூலகம் (King’s Library) என்ற பகுதி ஒன்று இங்கே இருக்கிறது. இங்கே சிறந்த ஆங்கில நூல்களும், அச்சின் வரலாறு, பைண்டிங் வரலாறு ஆகியவற்றைக் காட்டும் பொருள்களும், கீழ் காடுகளில் அச்சான புத்தகங்களும், கையெழுத்துப் பிரதிகளும், ஒலேச் சுவடிகளும் இருக் கின்றன. தபால் முத்திரைத் தொகுதியையும் இவ்விடத்தில் காணலாம்.

மேற்கே போய்ப் பார்த்தால் சிற்பப் பிரபஞ்சமே கண் முன் வந்து கிற்கும், அளிரியா, எகிப்து. கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளின் சிற்ப வகைகளை இங்கே கண்டு களிக்கலாம். எகிப்தியப் பகுதியில்தான் எத்தனை அற்புத மாண காட்சிப் பொருள்கள்!

மேல் தளத்துக்குப் போனல் அங்கே வடக்கே எகிப்து காகரிகத்தைக் காட்டும் பண்டங்கள் வரிசை வரிசையாகக் தோற்றம் அளிக்கின்றன. மிகப் பழங்காலத்துப் பொருள்கள் அவை: கி. பி. முதல் நூற்ருண்டு முதல் 6ஆவது நூற்ருண்டு வரையில் உள்ள காலப் பகுதியைச் சார்ந்தவை. பாபிலோனியாவின் பொருள்கள் ஒர் அறை யிலும், பர்ஸியாவின் பழம்பொருள்கள் ஓர் இடத்திலும், விரியாவிலிருந்து வந்த பண்டங்கள் ஒர் இடத்திலும்

உள்ளன.

தென்பகுதியில் ரோமாபுரியையும் பிரிட்டனயும் சேர்ந்த பழம் பொருள்கள் நம் கண்ணுக்கு விருந்தளிக் கின்றன. ஒரு புறம் இஸ்லாமியப் பொருள்களும், மத்திய ஆசியாவுக்கு உரிய பழம் பொருள்களும், இந்தோனீசியா வின் தொல்பண்டங்களும் இருக்கின்றன. இங்கே இந்தியச் சிற்பங்களேக் காட்டும் தனிக்கூடம் ஒன்றைக் காணலாம்.