பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மியூஸியம் 191

ஆயிரம் ஆயிரம் கண்கள் கண்டு வியக்கும் வண்ணம் கிடக்கிறது.

இலங்கைக் காட்சிச்சாலையில் கண்ணகியின் வடிவம் என்று ஒரு படிமத்தை வைத்திருக்கிருர்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். அதன் மூலப்படிவம் லண்டன் மியூஸியத்தில் இருக்கிறது என்று சொன்னர்கள். அந்த மூலத் திருவுருவத்தை இங்கே கண்டேன். அதோடு அந்த வடிவம் கண்ணகியுடையதன்று என்பதையும் அறிந்து கொண்டேன். பெளத்தர்களின் கடல்தெய்வமாகிய தாராவின் வடிவம் அது. அந்தத் தெய்வத்தைத்தான் மணிமேகலை என்றும் கூறுவார்கள்.

ஜாவாத் தீவிலிருந்து வந்த பல சிற்பங்களைப் பார்த்தேன். கிருதி முதலிய திக்குப் பாலகர்களின் திருவுருவச் சிலைகளைக் கண்டு களித்தேன்.

பல செப்பேடுகள் இங்கே உள்ளன. பாண்டியர்களின் வம்சாவளியைத் தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும் வேள்விக்குடிச் செப்பேடு இந்த மியூஸியத்தில் தான் இருக்கிறது.

பிரிட்டிஷ் மியூஸியத்தைப் பார்த்தேன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. வேகமாக ரெயிலில் போகும்போது காணுகிற காட்சியைப் போலச் சில பொருள்களைப் பார்த்தேன்; அவ்வளவுதான். நேரமும் வசதியும் இருந்தால் எ வ் வள வோ பார்க்கலாம்: எவ்வளவோ தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் மிகச் சிறந்த மியூளியத்தில் சில மணி நேரம் இருந்து சில பழம் பொருள்களைக் கண்டோம் என்ற சிறிய திருப்தியுடன் பிரிட்டிஷ் மியூஸியத்தை விட்டு வெளிவந்தேன்.