பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் திருநகர் 219.

தானே? ஆனல் அதை மதிக்கத் தெரிந்தவர்கள் அதை மதித்து அதன்படி நடந்து தாமும் புகழ் பெறுகிருர்கள்: அந்த விதிக்கும் சிறப்புத் தருகிருர்கள். "இவன் என்ன விதி செய்வது?" என்று அலட்சியப்படுத்தினல் விதியும் இராது மதியும் இராது. வாழ்வே அலங்கோலமாகி விடும்.

இப்போது இந்த நூலகத்தில் இருபது லட்சத்துக்கு, ம்ேற்பட்ட நூல்கள் உள்ளன. பழைய நூலகத்தில் இடம் போதாமையினல் புதிய பகுதி ஒன்றை அமைத்தார்கள். இரண்டுக்கும் இடையே நில அறைப் பாதை இருக்கிறது.

ராட்கிளிப் காமெரா என்ற இடத்தில் வரலாறு. ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக ஒரு படிப்பகம் இருக்கிறது. அரசாங்க மருத்துவராக இருந்த ஜான் ராட்கிளிப் (John Radclife) என்பவர் இதை நிறுவப் பொருள் வழங்கினர். அவர் 1650லிருந்து 1714வரை வாழ்ந்தவர்.

பல்கலைக் கழகத்துக்குரிய பெரிய அச்சகம் கிளாரெண் Lár argår p unraña) suffā (Clarenden Building). இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் தமிழ்ப் பேராசிரி யராக இருந்த ஜி. யூ. போப் இந்த அச்சகத்தில் தமிழ் எழுத்தக்களே உற்பத்தி செய்து, நாலடியார், திருக்குறள், திருவாசகம் என்ற நூல்களின் மொழிபெயர்ப்பை அச்சிடச் செய்தார். அவற்றின் தமிழ் மூலத்தையும் இந்த அச்சகத் திலேயே அச்சிட்டார்கள். கிளாரெண்டனில் இருப்பதால் அதைக் கிளாரெண்டன் பிரெஸ் என்றும் சொல்வார்கள். ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடி பிரெஸ்ஸின் கிளைகள் உலகில். பல நகரங்களில் உள்ளன. இந்த அச்சகத்தில் வெளியான கால்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை.

தேர்வுக் கூடங்கள், கலையரங்குகள், விளையாட்டரங்கு. கள் முதலிய பல பல அமைப்புக்கள் இந்நகரில் உள்ளன. பெண்கள் பயிலும் இடங்களும் இருக்கின்றன.