பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கண்டறியாதன கண்டேன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கெளரவ உதவியாளர்கள், கெளரவ நுண் கலைப் பொறுப்பாளர்கள் என்று வேறு வேறு பணிகளேப் பிரித்துக் கொண்டு செய்யும் அன்பர்கள் இருக்கிருர்கள். தமிழ் நாட்டிலும் அந்தப் பத்திரிகைக்குப் பிரதிநிதி உண்டு. அவர் பெயர் திரு டி. செல்வராஜன். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் தனியே பிரதிநிதி இருக்கிருர், மேற்கு நாடுகளில் முதன்முதல் தமிழ்த் திங்கள் ஏடு-இலாப நோக்கின்றி கடத்தப்படும் பிரசுரம்லண்டன் முரசு பிரசுரத்தால் வெளியிடப்பட்டது என்ற செய்திகளேத் தலைப்புப் பக்கத்தில் பெருமையுடன் வெளி :யிட்டிருக்கிருர்கள். இந்தப் பத்திரிகையில் கதை, கட்டுரை.

கவிதை வருகின்றன: விளம்பரங்கள் கூட இருக்கின்றன.

"தமிழரைக் கண்டால் தமிழில் பேசுவோம். கம் வீட்டுக் குழந்தையிடம் தமிழிலேயே பேசுவோம், இதில் நமக்கென்ன வெட்கம்?' என்ற தொடர்களைக் கொட்டை எழுத்தில் அட்டையில் வெளியிட்டிருக்கிருர்கள். தமிழர்கள் அயல்நாடுகளில் சென்று குடியேறிய பிறகு அங்குள்ள மக்களோடு அந்த காட்டு மொழிகளில் பேசுகிரு.ர்கள். வீட்டிலும் பெண்டு பிள்ளைகளோடு தாய் மொழியில் பேசுவதை விட்டுவிட்டு அந்த காட்டு மொழியில் பேசத் தொடங்குகிருர்கள். நாளடைவில் தம்மைத் தமிழர் என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் தமிழை அடியோடு மறந்துவிடும் அவல கிலேயை அடைகிருர்கள். இந்த கிலே வரக் கூடாதென்ற எண்ணத்தோடே இந்தக் கோட் பாட்டை அவர்கள் வற்புறுத்துகிருர்கள். இந்தியாவில் கூடத் தமிழ் நாட்டிலிருந்து பல காலத்துக்கு முன்பு வடக்கே சென்றவர்கள் தம் தாய்மொழியை மறந்து போயி ருக்கிருர்கள், "த்ரவிட் என்ற பட்டம் உடைய பலர் வட காட்டில் இருக்கிருர்கள். அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்கள். ஆனால் அவர்களுக்குத் தமிழே தெரியாது. அப்படியே தமிழ் காட்டில் ஆந்திர நாட்டிலிருந்து வந்த சில குடும்பங்களில் தெலுங்கே பேசுவதில்லை.