பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனில் தமிழ் ஒசை 223

லண்டன் முரசு பத்திரிகையில் மூன்ரும் உலகத் தமிழ் மாநாட்டைப் பற்றிய குறிப்பு ஒன்றை ஆசிரியர் வெளியிட் டிருக்கிருர். தாய்மொழியை மறந்துவிடும் ஆபத்தைப் பற்றி அவர் எழுதியிருக்கிருர். "பிஜித் தீவுகள், மலேசியா, டிரினிடாட், மொரிஷியஸ், தென்னப்பிரிக்காவில் பல பகுதிகள், உலகின் வேறு பல இடங்கள் ஆகியவற்றில் தமிழினம் வாழக் காண்கிருேம். ஆனல் இந்தத் தமிழ் இனத்தை ஒர் பெரும் ஆபத்துச் சுற்றிக் கொண்டுள்ளது. இது அவர்களுக்கே தெரியாது. தமிழனகப் பிற ங் து வளர்ந்தும், தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ளாத வேதனைதான் அது. தமிழனுக்குத் தமிழ் தெரியாதபோது உலகத் தமிழ் மாநாடும், யூனெஸ்கோவும் என்ன உதவி செய்யப்போகின்றன என்று பார்க்க வேண்டியுள்ளது. கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, கிறிஸ்துவ மிஷனரிகள் பல இடங்களுக்கும் செல்வது போல, தமிழ் மொழி மிஷனரிகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்லுதல் வேண்டும். தமிழனுக்கே தமிழினைக் கற்றுத் தரவேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது. ஆதலின் தமிழர் அனைவரும் விழிப்படைந்து அன்னைத் தமிழுக்குத் தம்மால் ஆன உதவி யைச் செய்தல் வேண்டும்.'

இந்தப் பத்திரிகையில் தமிழின் சிறப்பைப் பற்றிய கட்டுரைகளும், தமிழ்நாடு இலங்கை ஆகிய இடங்களில் கிகழும் கிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளும் இடம் பெறு கின்றன. படிப்பவர்கள் கருத்துக்களே வெளியிடுவதற்கும் இடம் வைத்திருக்கிருர்கள்.

இங்கிலாந்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட இந்து சங்கங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பிரித்தானிய இந்து மா undir spth (Hindu Association of Great Briton). g) s 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பெற்றது. இதன் தலைவர் திரு சோ. சபாபதிபிள்ளே. இவர் யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூர் என்னும் ஊரினர். பாரிஸ்டர் பரீட்சையில் தேர்ச்சி பெற்று இலங்கையில் பல காலம் பாரிஸ்டராக இருந்தவர்.