பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கண்டறியாதன கண்டேன்

சிவதீட்சை பெற்றவர். இவருடைய பிள்ளைகள் இங்கிலாங் தில் இருக்கிருர்கள். லண்டன் முரசின் கெளரவ ஆசிரி யராகிய திரு சதானந்தன் இவருடைய புதல்வர், இப்போது லண்டனில் சமயப் பணி செய்து கொண்டு வருகிருர். அங்கே ஒரு கோயில் எழுப்பும் முயற்சியை மேற்கொண் டிருக்கிருர். இவரும் பாரிஸில் கடந்த மாநாட்டுக்கு வக் திருந்தார்.

தமிழ்த் திரைப் படக் கலாசார சபை (Tamil Film Society) என்ற சிறுவனம் ஒன்று இருக்கிறது. திரு சபாபதி பிள்ளை அதிலும் தொடர்புடையவர். அவ்வப்போது அதன் சார்பில் தமிழ்ப் படங்களேக் காட்டி வருகிருர்கள். நான் போயிருந்தபோது ஓரிடத்தில் "தில்லான மோகனம்பாள்" படத்தைக் காட்டினர்கள்.

திரு சபாபதிபிள்ளையும் பிற அன்பர்களும் மேலே சொன்ன இரண்டு சபைகளின் ஆதரவிலும் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று அன்பர் திரு சா. கணேசனேயும் திரு ரா. நாகசாமியையும் என்னேயும் கேட்டுக் கொண் டார்கள். அவ்வாறே செய்ய இசைக்தோம், அப்பொழுது அவர்கள் இந்து மா மன்றத்தின் தொண்டுகளைப் பற்றிச் சொன்னர்கள். அம் மன்றத்தில் தமிழ் காடு, இலங்கை, மலேசியா, மோரீஸ் தீவு, தென் ஆப்பிரிக்கா, ட்ரினிடாட் ஆகிய நாடுகளிலிருந்து வந்த தமிழர்கள் உறுப்பினர்களாக இருக்கிருர்களாம். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் பொது: வான இடத்தில் பூஜை நடத்துகிருர்கள். சிவபெருமான், அம்பிகை, விநாயகர் முருகன் முதலிய மூர்த்திகளின் படங்களே வைத்து வழிபடுகிருர்கள். தோத்திரம் செய். கிருர்கள். பிரிட்டனிலுள்ள எல்லா இந்துச் சங்கங்களின் g)åvirů, já rødli (Federation of all Hindu Organisations. in U. K) என்ற ஒன்று இருக்கிறதாம். அதற்கும் திரு. சபாபதி பிள்ளையே தலைவர்,

1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பகலில் நானும் நண்பர்களும் ஆக்ஸ்