பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனில் தமிழ் ஓசை 229

'பாரிஸ் நகரத்தில் உள்ள கலைவளம், அங்கேயுள்ள மாடமாளிகைகள், அழகுத் திரளான அமைப்புக்கள். நாகரிகச் சிறப்பு எல்லாவற்றையும் கண்டுவிட்டு லண்டன் வந்தால், இங்கே புகை படிந்த கட்டிடங்கள் பழமையைக் காட்டிக் கொண்டு கிற்பதைக் காண்கிருேம். இங்குள்ள கட்டுப்பாட்டைக் கண்டு மதிப்புணர்ச்சி எழுகிறது. பருவப் பூரிப்புள்ள கட்டமுதுக் குமரிபோலப் பாரிஸ் நகரம் காட்சி யளிக்கிறது. இரண்டு பிள்களகளைப் பெற்று இல்வாழும் அமைதியான தாயைப் போல லண்டன் மாநகரம் காட்சி யளிக்கிறது. இங்கே அமைதி இருக்கிறது; பழமை இருக்கிறது. பாரிஸ் மாநகரில் ஒரு வெறி, ஒரு விண்ணுணம், மனத்தை மயக்கும் பேரழகு நிலவுகிறது. பாரிஸ் குமரியோடு குலாவ முடியவில்லை; அவள் ஊமையாக இருந்தாள்; அவள் பேசும் பேச்சு ஊமையின் ஒலியாக இருந்தது. இங்கிதமாகப் பேசாவிட்டால் நட்புக்கு இடம் எங்கே: 'கண்ணுெடு கண்ணிணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள், என்ன பயனும் இல" என்று வள்ளுவர் சொல்லுகிருரே என்று கேட்கலாம். அது முகற் சந்திப்பிலே நிகழ்வது. அப்பால் ஆயிரம் ஆயிரம் கதைகளையல்லவா பேசுகிருர்கள் காதலர்கள்? பகல் இரவு தெரியாமல், காலம் போவது தெரியாமல் அல்லவா பேசுகிருர்கள்? அந்தப் பேச்சுக் காதுக்கு எவ்வளவு இனிக்கிறது? அத்தகைய இனிமை பாரிளில் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

"இங்கே பாரிஸில் கண்ட கட்டழகு இல்லை; கலை வளங்கள் இல்லை. என்ருலும் இங்கே பேசுகின்ற மொழி எங்களுக்கு விளங்குகிறது. நமக்குப் பழக்கமான இடத்துக்கு வந்திருக்கிருேம் என்ற உணர்ச்சி உண் டாகிறது. லண்டன் மாநகரில் புகுந்தபோது நண்பனுடன் குலாவும் உணர்ச்சி வந்தது. இந்தக் கூட்டத்துக்கு வந்த பிறகு தாயின் மடியிலே தவழும் குழந்தையின் உணர்ச்சி ஏற்படுகிறது.'

இவ்வாறு பேசிவிட்டு லண்டன் தமிழர்கள் தமிழ்க் காதல் உடையவர்களாக இருப்பதைப் பாராட்டினேன்.