பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கொள்ளையா, பரிசா?

இப்போது தமிழ் நாட்டில் பெரிய அங்காடிகளே அங்கங்கே திறக்கிருர்கள். காமதேனு என்றும் கற்பகம் என்றும் அந்த அங்காடிகளுக்குப் பெயர் வைத்திருக்கிருர் கள். எல்லாப் பண்டங்களும் அங்கே கிடைக்கும். லண்டனில் இப்படி உள்ள ஓர் அங்காடிக்குப் போனேம். ஸெல்ப்ரிட்ஜ் (Selfridge) என்பது அதற்குப் பெயர். ஐந்து மாடிக் கட்டடம். அதைப் பார்த்த கண்களால் நம் ஊர்ப் பல்பண்ட அங்காடிகளாகிய ஸூபர். மார்க்கெட்டைப் பார்த்தால் யானையைப் பார்த்துவிட்டுக் கட்டெறும்பைப் பார்த்தது போல் இருக்கிறது.

அந்தக் கடையை ஒரு தனிக் கடை என்று சொல்வதை விட மாளிகை உருவத்தில் அடங்கிய ஒரு கடைவீதி என்றே சொல்லிவிடலாம். சிங்கப்பூரிலும் கோலாலம் பூரிலும் இத்தகைய பிரம்மாண்டமான கடைகளைப் பார்த்திருக்கிறேன்.

இந்த அங்காடியில் எங்கே பார்த்தாலும் எஸ்கலேட்டர் கள் ஏறுவதற்குத் தனியாகவும் இறங்குவதற்குக் தனியாகவும் இருக்கின்றன. பண்டங்களே அடுக்கி வைத் திருப்பதைப் பார்த்தால் இது ஒரு காட்சிச்சாலையோ என்று தோன்றும். ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு பண்டங்கள் வாங்குகிரு.ர்கள். எங்கே பார்த் தாலும் ஜே ஜே என்ற கூட்டம். அவர்கள் பண்டம் வாங்குவதிலும் பண்டங்களைப் பார்ப்பதிலும் விலையைக் கொடுப்பதிலும் ஒர் ஒழுங்குமுறை இருக்கிறது. எங்கே