பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கண்டறியாதன கண்டேன்

மேல்சபை மன்றம் 80 அடி நீளமும் 45 அடி அகலமும் 45 அடி உயரமும் உள்ளது. இந்த மன்றத்தில் பல ஒவியங், களும் சிற்ப வடிவங்களும் இருக்கின்றன. பார்லிமெண்டின் இரண்டு சபைகளும் சேர்ந்த ஆரம்பக் கூட்டம் இங்கேதான் கூடும். இங்கேதான் அரசியார் அமரும் சிங்காதனம் இருக்கிறது.

மக்கள் சபை மன்றம் 1941ஆம் ஆண்டு மார்ச்சில் கட்டப்பெற்றது. முந்தியது குண்டு வீச்சுக்கு ஆளாகியது. 630 அங்கத்தினர்கள் இருந்தாலும் 346 ஆசனங்களே இருக் கின்றன. பக்கவாட்டில் மேலும் 91 பேர் உட்கார வசதி செய்திருக்கிருர்கள். பெரிய சொற்பொழிவுக் கூடமாகத் தோற்ருமல் அடக்கமாக இருக்கவேண்டுமென்ற எண்ணத் தால் இந்த மன்றத்தை வின்ஸெண்ட் சர்ச்சிலே இப்படி அமைக்கச் சொன்னாாம். இரண்டாவது உலகப் பெரும் போர் கடந்த காலத்தில் அவரே பிரிட்டிஷ் பிரதமராக இருந்து விளங்கினர் அல்லவா?

மிகப் பெரிய நூலகங்கள் இங்கே இருக்கின்றன, மேல் சபைக்கென்றும், மக்கள் சபைக்கென்றும் தனித் தனியே, உள்ளன. ஜனநாயக தத்துவம், பலவேறு அரசியல் முறை கள். சட்டங்கள். நீதிமுறைகள், வரலாறு முதலிய பல துறைகளில் ஏராளமான நூல்கள் இங்கே இருக்கின்றன.

தேம்ஸ் நதிக்கரையிலிருந்து வெஸ்ட் மின்ஸ்டர் அரண் மனயைப் பார்த்தேன். உயர்ந்து ஓங்கி நின்ற கோபுரத்தில் உள்ள பிக்பென் கடிகாரத்தைப் பார்த்தேன். தேம்ஸ் நதி என்றும் போல் ஒடிக்கொண்டிருக்கிறது. பிக்பென் கடிகாரமும் என்றும் போல் திருப்பித் திருப்பிச் சுழல்கிறது: ஒரு கரளக்கு ஒருமுறை வட்டமிட்டுக் காலத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிச் சுழலும் சுழற்சி ஒரே மாதிரி ಲಗ್ನ இருந்தாலும் அந்தக் கடிகாரக் கோபுரத்தின் கீழ் உள்ள அரண்மனையில் எழும் சட்டங்களின் ஆணைக்கு