பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி வாழும் அரண்மனை 261

இப்போதுள்ள அழகிய வடிவை அடைந்து உலகம் போற்றும் பெரிய அரண்மனையாக நிலவுகிறது.

நான்காவது வில்லியம் மன்னர் இதை நல்ல முறையில் விரிவாக அமைக்கச் செய்து தம் அரண்மனையாகக் கொள்ள வேண்டும் என்று கினைத்தார். வேலைகள் கடந்து வந்தன. 1837ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரண்மனை வேலைகள் கிறைவேறின. ஆனல் அதை உருவாக்கிய மன்னர் இறந்து விட்டார். அவருக்குப் பின் வந்த விக்டோரியா அரசியாரே

படம் 18. பக்கிங்ஹாம் அரண்மனை

இந்த அரண்மனையில் முதலில் புகுந்து வாழும் வாய்ப்பைப் பெற்ருர். அரசியார் அரியணை ஏறி மூன்று வாரங்களுக்குப் பின், ஜூலே மாதம் 13ஆம் தேதியன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் புகும் விழா நடைபெற்றது. அரசியார் இங்கே இருப்பதற்கு அடையாளமாக இங்கே கொடி பறக்கத் தொடங்கியது. அரசியோ மன்னரோ இங்கே