பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கண்டறியாதன கண்டேன்

இல்லாவிட்டால் அந்தக் கொடி பறக்காது. நாங்கள் போன போது அரசியார் நகரில் இல்லை.

விக்டோரியா அரசியின் காலத்தில் இங்கே ஒரு விரிந்த கடன அரங்கு (பால்ரூம்) அமைக்கப் பெற்றது. 123 அடி நீளமும் 60 அடி அகலமும் உள்ளது. இது.

இந்த அரண்மனையில் விக்டோரியா அரசியின் நினைவுச் சின்னங்களே ஏழாம் எட்வர்டு மன்னர் அமைக்கத் தொடங் கினர். அவர் குமாரர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அதை நிறை வேற்றினர். அரண்மனைக்கு முன் விக்டோரியா அரசியின் பளிக்குருவம் அமைந்த கினேவுச் சின்னம் 1911ஆம் ஆண்டு

மே மாதம் திறந்து வைக்கப் பெற்றது.

இப்போது பிரிட்டிஷ் அரசியாக விளங்கும் இரண் டாவது எலிஸபெத் அரசியார், இங்கே ஒரு கலைக்காட்சி அரங்கை அமைத்திருக்கிருர். பல அரிய வண்ண ஒவியங்கள் இங்கே உள்ளன. முன்பு அரண்மனைக்குள்தான் கூட்டங் களும் விருந்தும் நடைபெறும். முக்கியமான பெரு மக்கள் வருவார்கள். இப்போது விரிந்த புல் வெளியில் விருந்துகள் நடைபெறுகின்றன. மக்கள் வந்து கலந்து கொண்டு இந்த அரண்மனையின் பயனை மிகுதிப்படுத்த வேண்டுமென்பது அரசியின் ஆர்வம். அவர் நடத்தும் விருந்தில் 9000 பெரு மக்கள் கலந்து கொள்வார்கள். அத்தனே பேருக்கும் ஒழுங் காக விருந்து பரிமாற எவ்வளவு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்!

அரண்மனையில் மேல்மாடிக்குச் செல்ல இரு புறமும் வளைந்த படிக்கட்டுகள் இருக்கின்றன; அழகிய பளிங்குக் கற்களால் அமைந்தவை. அவற்றில் உள்ள சித் திர வேலைப் பாடுகளைப் பார்த்தால், கல்லிலே செய்தவை போலத் தோன் ருமல், மெழுகிலே வடித்து அமைத்தவை போலக் காட்சி அளிக்கின்றன. இத்தாலியிலிருந்து கொண்டு வந்த பளிங்குக் கற்கள் அவை. எப்படி வேண்டுமானலும் இழைக்கும்படி அவை குழைந்து கொடுக்கும் போலும்!