பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கண்டறியாதன கண்டேன்

அல்ல. இனிமேல் நான் ஜோசியத்தையும் ரேகை சாஸ்தி ரத்தையும் எங்கே கற்றுக் கொள்ளப் போகிறேன்?

சரியாகப் பதினென்றரை மணிக்குப் பக்கிங்ஹாம் அரண்மனையில் "காவல் மாற்ற கிகழ்ச்சி நடந்தது. நெடுங் காலமாக ஒரு சடங்காக இது நடைபெறுகிறது. முதல் நாள் காவல் இருந்தவர்களே மாற்றிப் புதிய காவலர்கள் கடமை புரிய வருகிற கிகழ்ச்சி இது. பாண்டு வாத்தியங்கள் முழங்கின. முரசுகள் அதிர்ந்தன. செக்கச் செவேலென்ற உடையணிந்த காவலர்கள் வரிசை வரிசையாக கின்று புதிய காவலர்களை வரவேற்ருர்கள். அவர்களுடைய சிவப்பு ஆடை யின் ஒரமெல்லாம் பளபளக்கும் தங்கச் சரிகை. ஒழுங்கான கடை, வரையறையான வரிசை, எதிலும் ஒரு கட்டுப்பாடு. இவை அழகுக்குக் காரணம் ஆகின்றன: கல்வாழ்வுக்கும் ஒழுங்குதானே அடிப்படையாக இருக்கிறது?

கூட்டம், குதிரைமேல் வந்த வீரர்களையும் நடை போட்ட காவலர்களையும் கண்டு ஆரவாரம் செய்தது. இவர்கள் அரண்மனைக் காவலர்கள். அரசியின் காவலர்கள் (Queen's guards) என்ற அணி தனியே இருக்கிறதாம்.

உலகமெல்லாம் முடியாட்சி வீழ்ந்து குடியாட்சி மேலோங்கி நிற்கிற காலம் இது. இங்கிலாந்தில் குடி யாட்சியே நடைபெற்ருலும் முடிபுனேயும் மன்னரும் அரசி யரும் இருக்கிருர்கள். அரண்மனையும் இருக்கிறது. அரச வைபவங்களும் நடைபெறுகின்றன. நாம் கோயிலைப் பாது காத்துத் தெய்வங்களுக்கு மதிப்புக் கொடுப்பது போல அங்கே அரசர்களுக்கு மதிப்பு அளித்து அரண்மனையைப் போற்றிக் காத்து, அரசருக்கோ அரசிக்கோ முடி சூட்டி, சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாடி மகிழ்கிருர்கள். அதிலும் ஒருவகை இன்பம் இருக்கத்தான் இருக்கிறது.