பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 கண்டறியாதன கண்டேன்

கிருஷ்ண சைதன்யருடைய வழியைப் பின்பற்றுகிருர் களாம்.'

"எல்லோரும் ஆங்கிலேயர்களா?' 'ஆங்கிலேயர். அமெரிக்கர்கள் எல்லாரும் இருக்கிருர் கள். தலையில் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டு, நெற்றியில் கோபி நாமம் தரித்து, இடுப்பில் கச்சம் கட்டிக் கையில் ஜாலாாவும் சப்ளாக் கட்டையும்வைத்துக் கொண்டு வீதியில் பஜனை செய்துகொண்டு செல்வார்கள். பெண்களும் பஜனை செய்கிருர்கள். மிரு தங்கங்கட்ட வாசிக்கிரு.ர்கள். ஆடு வதும் உண்டு. ஒரே பக்தி உணர்ச்சியுடன் பாடுவார்கள்." 'உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறதே! நவீன காகரிகம் தாண்டவமாடும் இந்த நகரத்தில் லஜ்ஜையை விட்டுப் பஜனை பண்ணுகிருர்கள் என்ருல் ஆச்சரியந்தான். ‘லஜ்ஜையைவிட்டுக் கஜ்ஜையைக் கட்டு என்று பஜனைக் காரர்கள் பாடுவார்கள். நம் நாட்டில் ஆடுவது பெரிதன்று: இங்கே வீதியில் அப்படி ஆடிப் பாடுவதென்ருல், அவர்கள் எவ்வளவு தூரம் கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்திருக்கிருர்கள் என்பதை அது காட்டுகிறது.' - "அவர்கள் சில நாட்களுக்குமுன் ஆக்ஸ்போர்டு தெரு வில் தேர் இழுத்தார்கள்; அப்போது பெரிய கூட்டம் கூடி விட்டது."

எனக்கு உண்டான வியப்பு எல்லே கடந்தது. நம் காட்டில்.எத்தனை ஊர்களில் தேர்த் திருவிழா கின்றுபோய் விட்டது! வசதி இருந்தும் மனம் இல்லாதவர்களாய், மனம் இருந்தும் வசதி இல்லாதவர்களாய் மக்கள் இருக்கிருர்கள். இங்கேயோ, வேறு மதமும் வேறு நாகரிகமும் உள்ள நகரத்தில், உலகமெல்லாம் போற்றும் லண்டன் வீதியில், கிருஷ்ணனுக்குத் தேர்த் திருவிழா நடத்தினர்கள் என்ருல் வியப்பு மட்டுமா ஏற்படும்! உணர்ச்சி மிக்கவர்களாக இருங் தால் உண்மையில் மூர்ச்சை போட்டே விழுந்திருப்பார்கள். டாக்டர் மணி சொன்னதைக் கேட்கக் கேட்க அந்தக் காட்சி யைக் காணவேண்டும் என்ற ஆசை மீதுார்ந்தது. ஆனலும்