பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் வாழ்க! 275

வேறு இடங்களைப் பார்க்கவேண்டி யிருந்தமையால் "ஹரே கிருஷ்ணு'வைப் பார்க்க முடியவில்லை. .

மியூளியங்களுக்கும் ஓவியக் கூடங்களுக்கும் பூம் பொழில்களுக்கும் அழைத்துச் சென்ருர்கள் அன்பர்கள். லண்டனை விட்டுப் புறப்பட வேண்டிய நாளுக்கு முந்திய காள் ஆவலோடு பல இடங்களைப் பார்த்தேன். அவற்றில் டேட் காலரி என்ற ஓவியக் காட்சிச் சாலை ஒன்று. அங்கே ஒவியங்களும் சிற்ப வடிவவிங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. இரு வேறு பெரும் பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிருர்கள். 16ஆவது நூற்ருண்டு வரையில் உண்டான பிரிட்டிஷ் ஓவியங்களே வகைவகையாகப் பிரித்து வைத்திருக்கிரு.ர்கள், மற் ருெரு பிரிவில் பலவகை நவீன ஒவியப் படைப்புக்களை (Modern art) வைத்திருக்கிருர்கள். 31 கூடங்கள் (Gallaries) பல்வேறு ஓவியக் கருவூலங்களைக் கொண்ட கலைக்கோயில்களாக விளங்குகின்றன. 16, 17ஆம் நூற்ருண்டுப் படைப்புக்கள் ஒரு பக்கம். ஹோகார்த் என்ற ஒவியரின் கலைப் படைப்புக்கள் ஒரு புறம்: ரெய்னுல்ட்ஸ் என்ற ஒவியர் படைத்த ஓவியங்கள் ஒரு பக்கம். இப்படி அந்த அந்த ஒவியர்களின் கைவண்ணத் தைக் காட்டும் ஒவியங்களைத் தனித்தனியே வைத்திருக் கிருர்கள். ஒவியர்களின் கலைத்திறமை மெல்ல மெல்ல வளர்ந்து வந்ததையும், புதிய புதிய மாற்றங்களைப் பெற்ற தையும் இங்கே காணுகிருேம். ஒவ்வொருவருடைய பாணி யையும் அறிய முடிகிறது. இயற்கை எழிலேக் க்ோலம் செய்த ஒவியங்கள் உள்ளன. கற்பனைக் காட்சிகளைக் காட்டும் சித்திரங்கள் இருக்கின்றன. மனிதர்களின் உருவ -ஒவியங்கள்,செயலில் ஈடுபட்ட நிலையில் உள்ள சித்திரங்கள், குதிரைகளின் படங்கள் முதலியவற்றைப் பார்க்கிருேம். ஹாலந்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்த வான்டைக் என்ற ஒவியப்பெருங் கலைஞருடைய அற்புத ஒவியங்கள் உள்ளத் தைக் கொள்கள கொள்ளுகின்றன. அவரைப் பின்பற்றி ஒவியம் வரைந்த பல கலைஞர்கள் தங்கள் ஓவியங்களில் இங்கே வாழ்கிருர்கள்: -