பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கண்டறியான கண்டேன்.

அவை. ஆளுல் மற்றக் கவிகளைப் படித்துப் பொருள்: தெளிந்து கொள்வது போல அந்தப் பாடல்களைப் புரிந்து கொள்ள முடியாது. அதற்கென்று தனித் திறமை, வேண்டும். இந்த நவீன ஓவியங்களைப் படைத்தவர்களையும்

ஒரு வகையில் சித்தர்கள் என்றே கூறிவிடலாம். இந்த ஒவியங்களில் எவ்வளவோ ஆழமான கருத்துக்களெல்லாம் புதைந்து கிடைக்கின்றனவாம். அவை எளிதில் புரிவதில்லை.

இருபதாவது நூற்ருண்டில் வாழ்க்கவர் பிகாஸோ (Picasso). அவருடைய ஓவியங்கள் நவீனப் பிரிவில், இருக்கின்றன. 1925-ஆம் ஆண்டில் அவர் தீட்டிய மூன்று. ாடன மாதர்' என்ற படம் ஒன்று இருக்கிறது. அது மிகவும். உயர்ந்த சித்திரமென்றும்.அதிலுள்ள உருவங்களும் கிழலும் பல ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வன என்றும் எழுதியிருக் கிருர்கள், ஸ்ர்ரியலிஸ்ம் என்ற பாணியில் அமைந்த அதைக் கண்டு கண்டு புதிய ஓவியக் கலைஞர் வியந்து மகிழ்ந்து செயல் மறந்து கிற்பார்களாம். நமக்கும் ஒன்றும் விளங்: காமல் செயல் மறந்து கிற்கத்தான் தோன்றுகிறது.

ஒரு வழியாக, டேட் காலரியை விட்டு வெளியே வந்தோம். காலந்தோறும் வளர்ந்து வரும் ஓவியக் கலையின் வரலாற்றையும் போக்கையும் அறியும் ஆராய்ச்சிக் காரர்களுக்கு இந்த ஓவியக்கூடம் ஒரு பெரிய புத்தகமாக நிலவுகிறது.

事 * * 事

"ஹைட்பார்க்குக்குப் போகலாமா?" என்றகேட்டார் மணி. - .

'அங்கே என்ன விசேஷம்:” "அங்கே சொற்பொழிவாளர் மூல என்ற இடம் இருக்கிறது. பேசிப் பழகுவதற்கு ஏற்ற இடம் அது. ೯ಟೆ சின்னக் கூட்டமாகப் பல கூட்டங்கள் அங்கே கடக்கும். ஒருவன் ஒரு மேஜையைக் கொண்டுவந்து போட்டுக் கொள்வான். அதன்மேல் ஏறி நின்று தடயுட