பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் வாழ்க! 279

லாகப் பேசுவான். அதை முப்பது பேர் கேட்பார்கள், இப்படிக் குட்டிப் பிரசங்கம் செய்பவர்கள் பிறகு பெரிய பேச்சாளர்களாக ஆகிவிடுவதும் உண்டு.”

ஹைட்பார்க்குக்கு அழைத்துச் சென்ருர், மிகப் பெரிய பூங்கா அது. மிக விசாலமான புல்வெளி ஒரு பக்கம். மரங் களுள்ள இடங்கள் ஒரு பக்கம். அங்கே உள்ள ஒரு பகுதிக்குத்தான் பேச்சாளர் மூலை என்று பெயர். அங்கே ஆளுக்கு ஒரு பக்கம் ஒரு சிறிய மேடையை அமைத்துக் கொண்டு ஏதேதோ பேசுகிருர்கள். மேடையாவது! ஒரு ஜாதிக்காய்ப் பெட்டிதான் மேடை. அல்லது மேஜையே மேடையாக உதவுகிறது. மேடையே இல்லாமல் தரையில் கின்றபடியே ஆரவாரம் செய்யும் சிங்கங்களும் உண்டு.

இன்னதுபற்றித்தான் பேச வேண்டும். இப்படித்தான் பேச வேண்டும் என்ற வரையறையே இல்லை. கம்யூனி சத்தைப்பற்றி ஒருவன் ஒரு பக்கம் பேசுகிருன் சமயத்தைப் பற்றி ஒருவன் ஒரு மேடையில் பேசுகிருன் பிரதம மந்திரி செய்த தவற்றைப்பற்றிக் காரசாரமாக ஒருவன் பேசுகிருன். ஒவ்வொருவர் பேச்சையும் இருபதுபேர் முப்பது பேர்கள் கின்று கேட்கிருர்கள். உள்ளுர்க்காரனும் பேசுகிருன். அயல் காட்டுக்காரர்களும் பேசுகிருர்கள். ஆட்சியைக் குறை கூறிப் பேசுகிருர்கள். தனி மனிதர்களைக் காரசாரமாகக் கண்டித்துப் பேசுகிருர்கள். இவர்களேச் சோப்புப் பெட்டி நாவலர்கள்' (Soap box orators) என்று சொல்கிருர்கள். நாம் நம்முடைய முறையில் குட்டிச் சொற்பொழிவாளர் என்ருே, கற்றுக் குட்டிப் பேச்சாளர் என்ருே சொல்லலாம்.

இந்த இடத்தில் மட்டும் எது வேண்டுமானலும் பேச லாமாம். அரசுக்கு விரோதமாகக்கூடப் பேசுவதுண்டாம். இந்த இடம் மாத்திரம் சர்வ சுதந்தரமாகப் பேசும் தீவு போல இருக்கிறது. இதே பேச்சை வேறிடத்தில் பேசில்ை குற்றம் சாட்டிக் கைது செய்துவிடுவார்களாம்.

கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு ஆவேசமாகப் பேசுகிறவர்களைப் பார்த்தேன். பிரிட்டிஷ் அரசியைப்பற்றி .