பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் வாழ்க! 281

அங்கிருந்து நேரே இந்திய ஒய். எம். ஸி. ஏ. போனுேம். டாக்டர் மணி மதுரைக்காரர். அவர் அங்கேதான் தங்கியிருக் தார். எனக்கும் அன்பர் திரு சா. கணேசனுக்கும் அங்கே அறைகள் முன் கூட்டியே ஏற்பாடு செய்ததை முன்பே சொல்லியிருக்கிறேன். -

அங்கே போய்ப் பால் உண்டேன். டாக்டர் மணி. 'இன்று இங்கே பரிதிமாற் கலைஞருடைய நூற்ருண்டு விழாவைக் கொண்டாட எண்ணியிருக்கிருேம், நீங்களும் திரு கணேசனும் பேசவேண்டும்' என்ருர், நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

சிறிது நேரத்தில் அங்குள்ள பொதுக் கூடத்திற்குச் சென்ருேம். சும்மா உரையாடிப் பொழுது போக்க அமைந்த அந்த லவுஞ்சில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. நூருண்டு கிரம்பியதை கினைத்து நடந்த சிறிய அடையாளக் கூட்டம் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். பத்துப் பேர் கூடிய கூட்டம். ஹைட்பார்க்கில் பார்த்த குட்டிப் பேச்சாளர் கூட்டம் நினைவுக்கு வந்தது. ஆனல் அதற்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு! அது வெறும் ஆரவாரம். இதுவோ அமைதியான கூட்டம். ஒவ்வொருவரும் பயபக்தி யோடு கலந்து கொண்டார். திரு சா. கணேசன், வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியைப் பற்றியும் அவருடைய மானக்கர் அமரர் க. பலராம ஐயரைப் பற்றியும் பேசினர். பலராம ஐயரோடு தாம் பழகியிருப்பதாகச் சொன்னர்.

நான், பரிதிமாற் கலைஞர் முதல் முதலாகத் தமிழ் வரலாறு எழுதின புலவர் என்று சொன்னேன். அவரிடம் பன்னிரண்டு மாணக்கர்கள் பயின்ருர்கள். அகத்திய ருக்குப் பன்னிரண்டு மாளுக்கர்கள் என்று கூறுவதுண்டு, அதுபோல வி.கோ. கு.வுக்கும் பன்னிரண்டு மாணுக்கர்கள். என் ஆசிரியப்பிராளுகிய ஐயரவர்கள் ஒரு முறை சொன் ர்ைகள்: 'சூரியநாராயண சாஸ்திரியார் மிகவும் கூர்மை, யான அறிவாளி. சிறுவயசிலேயே இறந்துபோளுர், "கம்