பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ஏமாற்றமும் மாற்றமும்

பாரிஸுக்குப்புறப்படும்போது இங்கிலாந்து,ஜெர்மனி, இத்தாலி முதலிய இடங்களுக்கும் போவதாகத் திட்டம் போட்டிருந்தேன். சுவிட்ஜர்லாந்து, எகிப்து என்ற நாடுகளுக்கும் முடிந்தால் போய்ப் பார்த்துவரலாம் என்ற விருப்பமும் இருந்தது. என்னுடைய நண்பர்களுக்குத் தெரிந்தவர்கள் அங்கங்கே சிலர் இருந்தார்கள். அவர் களின் விலாசங்களைச் சென்னையிலுள்ள நண்பர்களிடம் வாங்கிக்கொண்டேன். சிலர் தம் நண்பர்களுக்கு நான் வருவதாகக் கடிதம் எழுதினர்கள். என்னிடமும் அறிமுகக் கடிதங்களைக் கொடுத்தார்கள்.

குமுதம் கிர்வாகி, அன்பர் திரு பார்த்தசாரதி மேற்கு ஜெர்மனியிலுள்ள ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதியதோடு, எனக்கும் அவருடைய விலாசத்தைக் குறித்துக் கொடுத் தார். "லண்டனுக்குப் போய்விட்டு அங்கிருந்து திரும்பும் வழியில் மேற்கு ஜெர்மனி போகலாம்; ஃபிராங்க்பர்ட் என்னும் நகரத்தில் இறங்கிப் பார்க்கலாம். அங்கே அந்த அன்பருடைய உதவியைப் பெறலாம் என்று கினைத்தேன்.

அந்த நண்பர் திரு.ராமசந்திரன் என்பவர். அவர் மேற்கு ஜெர்மனியில் ராணுவத்தில் இருப்பவர். நல்ல வேளையாக அவர் பாரிஸில் கடந்த உலகத் தமிழ்க் கருத்தரங்குக்கே வந்திருந்தார். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரைக் கண்டவுடன் பருத்தி புடைவையாய்க் காய்த்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. நானும் அன்பர் திரு சா. கணேசனும் ஒன்ருகப் பயணம் செய்வோமென்றும், லண்டனிலிருந்து ஃபிராங்க்பர்ட் வருவோமென்றும், அப்