பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ2 ரோமாபுரியில் முதல் நாள்

ரோமாபுரி என்னும் பெருநகரம் மிகப் பழைய காகரிகத்தின் சின்னங்களேயும் புதிய படைப்புக்களையும் கொண்டு விளங்குகின்றது. அதை ரோம் என்று ஆங்கி லத்தில் எழுதுகிருர்கள். ஆனல் அங்கே அதை ரோமா என்றே சொல்லுகிருர்கள். ரோமாபுரி என்று நாம் சொல்வது அந்த வழக்கைப் பின்பற்றியது.

இத்தாலி நாட்டின் தலைநகரம் ரோமாபுரி. 23-7-1970 அன்று காலையில் எழுந்து பிராங்க்பர்ட்டில் ரோடிவிட்டு விமான நிலையம் வந்தோம். லுப்தான்ஷா விமானத்தில் 8-55க்குப் புறப்பட்டோம். ரோமுக்கு இத்தாலி மணி 11-15க்கு வந்தோம். விமான நிலையத்துக்கருகில் ஓரிடத்தில் சாமான்களைப் போட்டுவிட்டு ஏர் இந்தியா அலுவலகம் போய் அங்குள்ள திரு சேகர் என்பவரைப் பார்த்தோம். அவர் தமிழர். ரோமில் எந்த இடத்தில் தங்கலாம் என்று கேட்டேன். ஒய். எம். வி. எ. யில் தங்கலாம் என்று சொன்னர். அவருடைய யோசனையின்படியே நானும் திரு சா. கணேசனும் எங்கள் சாமான்களே எடுத்துக் கொண்டு அங்கே சென்று ஓர் இரட்டை அறையில் தங்கிளுேம், . . . . . . .

பாரிஸிலும் சரி, லண்டன், பிராங்க்பர்ட் முதலிய இடங்களிலும் சரி, கூலிகளே இல்லை. சேவகர்கள் என்ற இனமே கிடையாது. ஆல்ை ரோமாபுரியில் போர்ட்டர் களைப் பார்த்தோம். அவர்கள் கேட்கும் கூலியைப் பார்த்தால் நம்க்கு மலைப்புத் தோன்றும். அங்கே டாக்ளிக் காரர்கள் நம் ஊர் டாக்ளிக்காரர்களைப் போலவே கூடிய