பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 கண்டறியாதன கண்டேன்ச

அந்தக் கூட்டம் இருந்தது. அந்த வழிகாட்டி நடமாடும் விரிவுரையாளராக இருந்தார். அந்தக் கூட்டத்தோடே வந்துகொண்டிருந்த நான் சில இடங்களில் கின்று கவனித் தேன்; சிற்ப அழகில் ஈடுபட்டு கின்றேன். என்னுடன் வந்தவர்கள் வேறு இடங்களுக்குப் போனர்கள். பிறகு, அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று எண்ணிக்

கன்னி மேரியின் மடியில் கிடந்த ஏசுநாதரின் கோலத்தில் கண்ணேப் பறிகொடுத்து கின்றேன்: கருத்தையும் ஆழ விட்டேன். நேரம் போவது தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்துப் பார்த்தேன். உடன் வந்த கூட் டத்தினரைக் காண வில்லை. நண்பர் கணேசனேயும் காண வில்லை. வெளியில் வந்து நாங்கள் வந்த பஸ்ஸைப் பார்த் தேன்; அது போய்விட்டது. குறிப்பிட்ட கேரத்துக்கு மேல் நிற்க மாட்டார்களே!

திருக்கோயிலின் முற்றவெளியில் எவ்வளவோ பஸ்கள் கின்றன. நாங்கள் வந்த பஸ்ஸைக் காணவில்லை. மறுபடி யும் காங்கள் தங்கியிருந்த ஒய். எம். ஸி. ஏ.க்குப் போக வேண்டுமே! அங்கே இருந்த போலீஸ்காரர்களைக் கண்டு, எப்படிப் போகவேண்டும் என்று விசாரித்தேன். அவர் களுக்கு ஆங்கிலம் புரியவில்லை. எல்லோரும் இத்தாலி மொழியில் பேசினர்கள். சாடையில்ை சொல்லலாம் என் முல் எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? பஸ்கள் கிற்குமிடத்தில் போய் விசாரித்தேன். எல்லோரும் பேசி ஞர்கள். ஒருவராவது எனக்குத் தெரியும் மொழியில் பேச வில்லை, -

அங்கே கின்றிருந்த டாக்ஸிகளே அணுகினேன். டாக் விக்காரர்களுக்கு நான் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை. ஒய். எம். ஸி.ஏ., ஒய். எம். ஸி.ஏ. என்று மந்திர ஜபம் செய் வதுபோலச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒருவராவது அதைத் தெரிந்துகொள்ளவில்லை. மிகவும் அலுத்துப்போய் அங்கே கின்றிருந்த வேறு ஒரு டாக்ஸியை அணுகினேன்.