பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கண்டறியாதன கண்டேன்

இந்த நகரத்தில் போக்குவரத்துக்கு வழி காட்டும். ஒளி விளக்குகள் இல்லை. போலீஸ்காரர்களும் இல்லை. உண்ர் சிறியதாகையால் அவை தேவை இல்லே போலும்!

இங்கே அமெரிக்கத் தூதுவராலயம் மிகப் பெரியது. அமெரிக்கப் பல்கலைக்கழகமே ஒன்று இங்கே இருக்கிறதாம். அப்படியே பிரெஞ்சுக்காரர்கள் பல்கலைக்கழகம் ஒன்றும் உண்டாம். டாக் ஸி. க் கார ரே இவற்றையெல்லாம் விளக்கினர். அந்த நாட்டு அரசியலைப் பற்றிக்கூட அவர் சொன்னர். "இன்னும் சில நாளில் தேர்தல் நடக்கப் போகிறது” என்று சொல்லி, அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் சொன்னர். அந்தச் செய்திகளுக்கும் ாமக்கும் என்ன சம்பந்தம்? அவர் சொன்னவற்றைச் சரிதான், சரிதான் என்று கேட்டுக்கொண்டேன்; அவ்வளவுதான்.

பெய்ரூத்தில் மூன்று துறைமுகங்கள். கரைக்குச் சிறிது துாரத்தில் கடலுக்குள் நெடிய சுவரைப்போலப் பாறைகள் கிற்கின்றன. சில பாறைகள் கற்கவியைப் போல (Arch) கடுவில் ஒன்றும் இல்லாமல் வளைவாக கிற்கின்றன. ஒரு காலத்தில் சுவராக இருந்த இடத்தில் கடல் புகுந்தால் எப்படியோ, அப்படித் தோற்றம் அளிக்கின்றன. ஆனால், அவை சுவர்கள் அல்ல:இயற்கையாக அமைந்த பாறைகள்ே.

ஸெயிண்ட் ஜார்ஜ் பீச் என்ற இடத்தில் பல நாட்டுக் கடைகள் இருக்கின்றன. இந்தியக் கடைகூட ஒன்று இருக்கிறது. அங்கே போய்ப் பார்த்தோம், நம் காட்டுப் பொம்மைகள், சித்திரங்கள் எல்லாம் இருந்தன.

லெபனன் நாணயம் பவுன். அமெரிக்க டாலருக்கு மூன்று பவுன் கிடைக்கும். அதாவது 2-50 ரூபாய்க்குச் சமம். - - -

- கடற்கரையைச் சுற்றி 'வந்தோம். பல கடைகளைப் பார்த்தோம். கடற்கரையிலிருந்து சிறிது. தூரத்தில்