பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

该*

முற்பகலும் பிற்பகலும் 37

மதுவையே அருந்தினர்கள். தண்ணிருக்கு அங்கே வேறு வேலே இல்லை; கை கழுவுவதோ வாய் கொப்புளிப்பதோ வழக்கம் இல்லையே! கேட்டால் எங்கும் தண்ணீர் கிடைத்தது. பல வியாபார கிலேயங்களிலும் உணவுச் சாலைகளிலும் சிற்றுாற்ருகத் தண்ணீர் மேல் எழும்பித் தொட்டியில் விழும்படி செய்திருக்கிருர்கள். அதில் வாய் வைத்து வேண்டிய அளவுக்குத் தண்ணீர் குடிக்கலாம். உலோகத் தண்ணிர் (Mineral water) என்ற நீரைப் பாட்டிலில் வைத்து விற்கிருர்கள். ஐந்து ரூபாய் ஆறு ரூபாய் கொடுத்தால் அதைத் தருவார்கள். நாம் சோடா வாங்கிப் பருகுவது போல அதை வாங்கிப் பருகலாம்.

காலையில் சிற்றுண்டி உண்ட பிறகு ஏர் இந்தியா அலுவலகம் சென்ருேம். அந்த வீதியில் வெவ்வேறு காட்டு விமான அலுவலகங்களும் தூதுவராலயங்களும் இருக் கின்றன. இங்கிய விமான அலுவலகத்துக்குள் துழைந்தோம். நுழையும் இடத்தில் ஒரு குளம்போல அமைத்து அதன் மேலே பாலம் போல நடைபாதையைப் போட்டிருக்கிருர்கள். நல்ல பளிங்குக் கல் அடித் தளத்தின் மேல் தண்ணிர் சிலுசிலுவென்று ஒடுகிறது. அந்தக் குளத்தில் வண்ண வண்ண மீன்கள் உலாவுகின்றன. உள்ளே போைேம். சுவரில் இந்திய ஒவியங்கள் மாட்டி யிருக்கிருர்கள். இரண்டு பெண்கள் இருந்தார்கள்.

ஒரு பெண்ணே அணுகி, "எங்கள் விமானச் சீட்டை லண்டன் வரைக்கும் நீட்டிக் கொடுப்பீர்களா?' என்று கேட்டேன். அந்தப் பெண்மணி, 'செய்யலாம்” என்ருர். "எத்தனை பணம் கட்ட வேண்டும்?' என்று கேட்டேன். 'ஐம்பத்தாறு டாலர்' என்ருள். சென்னையில் நான் விசாரித்து அறிந்ததற்கும் அதற்கும் வேறுபாடு இருந்த்து. மற்ருெரு பெண்மணியை அணுகி, "எவ்வளவு ஆகும்?" என்று கேட்டேன். இரண்டு பேரும் இருவேறு கோடிகளில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் சொன்ன ப்திலும் இரு வேறு கோடியாகவே இருந்தன. 'பதிைெரு டாலர்"