பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$72 கண்டறியாதன கண்டேன்

முன்னேடி என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துநதிப் பள்ளத்தாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதைபொருட் சின்னங்கள் இந்தக் கருத்துக்குப் புதிய ஆதரவு அளித்தன. பிறகு (கம்போடியா காட்டில்) கிமர் கட்டிடக் கலையில், அண்டத்தின் சின்னமாகக் கருதப்படும் மலைவடிவக் கோயில்களைக் காண்கிருேம். சிந்து நதியிலிருந்து கம்போ டியா வரை - அதற்கும் அப்பால் போரோபுதுார் வரை - தமிழ்க் கலாசாரம் விரிந்து பரந்து, காலத்தால் கரையாது விளங்கியதற்குச் சான்ருகப் பல சின்னங்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து கிற்கின்றன. ரீரங்கநாதர் ஆலயம், ராமேச்வரம் கோயில் முதற்கொண்டு பல தென்னிந்தியக் கலைச் சின்னங்களைப் பாதுகாக்கும் நீண்ட காலத் திட்டத்தில் யுனெஸ்கோ ஸ்தாபனம் ஒத்துழைக் கிறது" என்பது அவர் பேச்சில் ஒரு பகுதி.

பிறகு நடராஜ வடிவத்தைச் சிறப்பித்துப் பேசினர். 'சைவத்தைத் தழுவிய பல மகாபுருஷர்கள் எவ்வு யிர்க்கும் பொதுவான பரம்பொருளைப் பற்றித் தங்கள் உணர்ச்சிகளைக் கவிதை வடிவிலே அளித்திருக்கிரு.ர்கள். இதற்கு இணையாகத் தென்னிந்திய வெண்கலச் சிற்பங்களில் பெரிதும் காணப்படும் நடராஜர் சிற்பம் மனித குலத்தின் மாபெரும் கலைச் சின்னங்களில் ஒன்ருகவே அமைந்துவிட்டது. இது சிவபெருமானின் மற்ருெரு வடிவமாகும். அந்த ஆடலரசன் உருவத்திலே உயிரும் உயிரின்மையும் ஒன்றே - ரூபமும் அரூபமும் ஒன்றே. அமைதியும் அசைவும் ஒன்றே. அந்த ஆனந்தத் தாண்ட வத்தில் உடலும் ஆவியும் இரண்டறக் கலந்துவிட்டன" என்கிருர் ஆனந்த குமாரஸ்வாமி. இவர் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரும் கலாவிமர்சகரும் ஆவார். டி. எஸ். எலியட்டின் கவிதையிலே நான் நடராஜப் பெருமானின் இதே வடிவைக் காண்கிறேன்.

“இங்கே காட்டப்பெறுபவை, அச்சிட்ட அவர் உரையில் உள்ளவை. • . . - . * ..