உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகிக் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

கண்ணகி கதை

வேண்டுவன செய்யுமா று அமைச்சர்கட்கு ஆணையிட்டான்.
அரங்கேற்ற நாள் குறிக்கப்பட்டது. கலைவல்ல புலவர்க்கும்,
சுவைகொள்ளும் அறிஞர்க்கும் (ரசிகர்கள்), அருள் உள்ள
செல்வர்க்கும் அழைப்பு விடுத்தான்.

பாட்டு

காவிரிப்பூம் பட்டினத்தில்-பட்டினத்தில்
    கரிகாலன் திருநகரில்-திருநகரில் பாவலர்கள் துதிக்குமவன்-துதிக்குமவன்
    பண்ணமைந்த மாசாத்துவான்-மாசாத்துவான்
பெற்றெடுத்த நற்புதல்வன்-நற்புதல்வன்
    பெருமை கொண்ட கோவலனாம்-கோவலனாம்
கற்றபெருங் கலைவாணன்-கலைவாணன்
    கலையருமை அறிந்திடுவான்-அறிந்திடுவான்
திருமகளும் கலைமகளும்-கலைமகளும்
    மருவுமொரு திருவாளன்-திருவாளன் உருவமிகு பேரழகன்- பேரழகன்
    உத்தமனாம் கோவலற்கும்-கோவலற்கும் அரங்கேற்ற அழைப்பிதழும்-அழைப்பிதழும்
    அரசனவன் அனுப்பிவிட்டான்-அனுப்பிவிட்டான்
விரைந்துசபை அடைந்துவிட்டான்-அடைந்துவிட்டான்
    மேலான கோவலனும்-கோவலனும் கரிகாலன் சபையடைந்த-சபையடைந்த
    கலைவள்ளல் கோவலனும்-கோவலனும் அருகிருந்த ஆசனத்தில்-ஆசனத்தில்
    அமர்ந்துமகிழ்ந்து இருந்தானய்யா-இருந்தானய்யா
கலைவல்ல புலவரெல்லாம்-புலவரெல்லாம்
    கருணையுள்ள செல்வரெல்லாம்-செல்வரெல்லாம்
கலையழகைக் காண்பதற்கு-காண்பதற்கு
    கருத்துடனே வீற்றிருந்தார்-வீற்றிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/19&oldid=1306750" இலிருந்து மீள்விக்கப்பட்டது